திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் முருகன் (38) இவர் முருக்கம்பட்டு கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆடு மற்றும் கோழி பண்ணை வைத்துள்ளார்.
அவரது பண்ணையில் வேலை செய்ய திருத்தணி இந்திரா நகரை சேர்ந்த வினோத் என்பவரின் உறவினரான வெண்ணிலா அவரது 3 (மகன்கள்)சிறுவர்களுடன் பண்ணையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.
வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷ் (15) என்ற சிறுவன் ஆடுகளை மேய்க்கும் பணி செய்து வந்துள்ளார். அவர் ஆடுகளை சரிவராக மேய்க்கவில்லை என்று பண்ணையின் உரிமையாளர் முருகன் 4 மாதங்களுக்கு முன்பு அடித்து உதைத்ததில் சிறுவன் சுரேஷ் இறந்துள்ளார்.
இதையும் படிங்க: "தமிழகத்தையே உலுக்கிய கவின் ஆணவக் கொலை"..! சுர்ஜித்தின் தந்தை சரவணனுக்கு ஜாமீன்..!!

சடலத்தை வினோத் உதவியுடன் ஆட்டுப்பண்ணை அருகில் புதைத்து யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சிமெண்ட் பூசி தரை போட்டுள்ளனர். மேலும் சிறுவன் அடித்து கொலை செய்ததை வெளியில் தெரியாமல் இருக்க வெண்ணிலா மற்றும் சிறுவர்களையும் ஆட்டுப்பண்ணையில் 4 மாதங்களாக அடைத்து வைத்து சித்தரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணிலா அங்கிருந்து தப்பி திருத்தணி காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறி புகார் செய்தார்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருத்தணி போலீசார் ஆட்டுப்பண்ணை உரிமையாளர் முருகன் மற்றும் வினோத் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஆட்டுப் பண்ணையில் புதைக்கப்பட்ட சிறுவன் உடலை திருவள்ளூர் மாவட்ட பயிற்சி ஆட்சிய்ஸ்ரீ சித்ரா தலைமையில் போலீசார் முன்னிலையில் மருத்துவ குழுவினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் குழுவினர் ஜேசிபி மூலம் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
இதையும் படிங்க: பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!