இலங்கை அருகே வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இலங்கைக்கு கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதிகளை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரையில் அம்மாந்தப்பேட்டைக்கு கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மட்டக்களப்பிலிருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலும் தென்கிழக்கே மையம் கொண்டு இருந்தது.

இது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை வழியாக கிட்டத்தட்ட வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாக ஆழ்ந்த காற்ற தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை வழியாக வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, சென்னை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அடிச்சு நகர்த்தப் போகுது மழை... சென்னைக்கும் ரெட் அலர்ட்... உஷார் மக்களே...!
இந்த நிலையில், குமரி கடல் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் டிட்வா புயல் உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று டிட்வா புயலாக உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று டிட்வா புயலாக உருவானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது என கூறியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: சென்யார் புயல் உருவானது... இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!