மலாக்கா ஜலசந்தி அருகே இன்று மதியத்திற்குள் சென்யார் புயல் உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக மலாக்கா ஜலசந்தியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று இரவு 11:30 மணி அளவில் தீவிரம் அடைந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி கடந்த 6 மணி நேரமாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் அதே பகுதியில் நிலவி வந்தது. இந்த சென்யார் புயல் தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட 2600 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த நிலையில், தமிழகத்திற்கு நேரடியாக மழையோ அல்லது காற்றோ பாதிப்பு கிடையாது என்பதையும் ஆய்வு மையம் தெளிவுப்படுத்தியது.

அதேபோல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு இலங்கை அருகே நிலவிய வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில இந்த புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையும் படிங்க: புயல் வருதாம்... டிசம்பரில் சென்னை எப்படி இருக்கும்..? தென் மண்டல வானிலை மைய இயக்குனர் அமுதா முக்கிய தகவல்...!
இந்த நிலையில், மலாக்கா ஜலசந்தி, தெற்கு அந்த மானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்யார் புயல் இன்று காலை 5:30 மணி அளவில் உருவாகி இருப்பதாகவும் இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அலற விடும் ஆரஞ்சு அலர்ட்… லிஸ்ட்- ல சென்னையும் இருக்காம்..! வெளுக்க போகுது மழை…!