2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரம், சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் திமுக மும்முரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்திருப்பதாகவும் சாதனை திட்டங்களை செயல் படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று திமுக மூத்த நிர்வாகிகள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றனர். மீண்டும் தமிழகத்தில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றும் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். இந்த நிலையில், திமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை எடுத்து சொல்ல பரப்புரை பயணம் தொடங்க இருப்பதாக டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் நாளை முதல் திராவிட முன்னேற்றக் கழகம் பிரச்சாரம் தொடங்குகிறது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுக மீது சொல்லப்படும் குற்றங்களை பொதுமக்களிடம் விளக்க தமிழ்நாடு தலைகுனியாத திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று முதலமைச்சர் பல திட்டங்களை அறிவித்திருப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவில் புதிய கட்சிகள் இணையும்..! WAIT AND SEE...! எம்.பி கனிமொழி உறுதி..!
கல்வி, மருத்துவம், உணவு பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய நான்கு துறைகளில் பல சீரிய திட்டங்களை முதலமைச்சர் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் மற்றும் துரோகம் செய்யும் அரசாக மத்திய அரசு உள்ளது எனவும் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களையும் மத்திய பாஜக அரசு வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பா? மீண்டும் மீண்டும் பொய் பேசும் முதல்வர்..! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு..!