2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. மேலும், அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்து வருகிறார். அதில் தமிழக வெற்றிக்கழகம் முக்கிய இடத்தை பெறுகிறது. அரசியலின் புதிய அலை என விஜய் கூறி வருகின்றனர். ஏற்கனவே அவரை கூட்டணிக்கு அழைத்த நிலையில் அதனை மறுப்பதாக விஜய் பேசி இருந்தார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக விஜயை கூட்டணிக்கு அழைக்கிறதே, அப்படியானால் கொள்கை எதிரி என பாஜகவை விஜய் கூறி வருவதால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்தது. தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணி வைக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி பேசி வந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் சம்பவத்திற்கு உடனடியாக தமிழக வெற்றி கழகத்தை குறை சொல்லாமல் முழு பொறுப்பை ஆளும் திமுக அரசின் மீது வைத்தார். தமிழக வெற்றி கழகத்தை எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைப்பது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைப்பது தொடர்பாக டி.கே.எஸ் இளங்கோவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: விஜயுடன் கைகோர்க்கும் இபிஎஸ்… அப்ப அதுக்கு ரெடியா? திருமா சரமாரி கேள்வி…!
அப்போது, அவர் என்ன நினைக்கிறார் என்ற தனக்கு தெரியாது என்றும் ஆனால் சில அதிமுக தொண்டர்கள் தமிழக வெற்றிக்கழக கொடியை பிடித்திருந்தனர் என சொல்வது சரியானது என்றும் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் அவர்கள் கிடையாது எனவும் கூறினார். ஏனென்றால் அவர்கள் விஜய் முதல்வர் ஆகவே விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்தார். அதனால் விஜய் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக்குவாரா என்றும் இந்த கண்டிஷனை ஏற்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு! எப்போது? முக்கிய அப்டேட் கொடுத்த மேயர் பிரியா...!