வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகிறது.
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது 22 ஆம் தேதி தென்கிழக்கு வங்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடிச்சு நகர்த்த போகுது... 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... உஷார் மக்களே...!
இந்த நிகழ்வால், தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை பரவலாக மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், தென்காசி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடிச்சு நொறுக்க போகுது... கனமழை எச்சரிக்கை... சென்னைக்கும் வார்னிங்...!