அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள சக்லகம் பகுதியில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மலையிலிருந்து கீழே விழுந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், சுமார் இருபத்தி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அங்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடூரமான இந்தச் சாலை விபத்தில் லாரியில் இருந்த 22 தொழிலாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் தற்போது மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தொழிலாளர்களின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தகவல்களின்படி, இந்தத் தொழிலாளர்களில் 19 பேர் அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள கிலாபுகுரி தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான சரியான காரணம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னமும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: முக்கிய அறிவிப்பு... உணவு பொட்டலங்களில் VEG, NON VEG குறியீடு கட்டாயம்... கறார் காட்டும் அதிகாரிகள்...!
இதையும் படிங்க: இந்தியாவுல இதுதான் ஃபர்ஸ்ட் H2 கப்பல்..!! தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர்..!!