திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பி ஆர் நாயுடு தலைமையில் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பி ஆர் நாயுடு நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கும் எல்.ஐ.சி. மூலம் காப்பீடு செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் திருமலைக்கு வந்த ஏதோ ஒரு காரணத்தால் இயற்கை மரணம் அடையும் பக்தர்களுக்கு ரூ 2 லட்சம் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ 3 கோடி குரூப் இன்சூரன்ஸ் காப்பீட்டு தொகையாக செலுத்தப்படும். இதேபோன்று திருமலையில் மலைப்பாதையில் விபத்தில் இறந்தால் ரூ 3 லட்சம் வழங்கப்பட்டு வந்த காப்பீட்டு தொகை ரூ 10 லட்சம் உயர்த்தப்படுகிறது.
இதற்காக ரூ 70 லட்சம் காப்பீட்டு தொகையாக தேவஸ்தானம் செலுத்தப்படும். பக்தர்களுக்கு நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் லட்டு தயாரிக்கும் மடப்பள்ளியில் உள்ள ஊழியர்களில் பலர் வரும் ஆண்டுகளில் அடுத்தடுத்து ஓய்வு பெறும் நிலையில் உள்ளதால் 400 பேர் நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்! இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு! பக்தர்கள் அவதி!
இதற்காக அரசு அனுமதிக்கு கோப்புகள் அனுப்பப்பட்டு அனுமதி வந்தவுடன் பணியாளர் தேர்வு நடைபெறும். இந்தியன் ஆயுள் கார்ப்ரேஷன் நிறுவனத்தின் மூலம் அன்னப்பிரசாத கூடம், திருமலையில் சேரும் கழிவுகள், ஹோட்டல்களில் சேரும் உணவுகளை சேகரித்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்து அன்னப்பிரசாத கூடத்திற்கு பயன்படுத்த முடிவு செய்து இதற்காக அந்நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளோம். திருமலையில் தூய்மை பணிகளை மேலும் சிறப்பாக செய்ய தூய்மை பணியாளர்கள் திருமலைக்கும் திருப்பதிக்கும் வந்து செல்ல இலவச பேருந்து சேவைக்காக ரூ 1.60 கோடி ஆர்.டி.சி.க்கு செலுத்தப்படும்.
சென்னையில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் கொடிமரம், பலிப்பீடத்திற்கு தங்கத்தகடு பதிக்க ரூ 17.50 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்களுக்கான பயன்களை பெறுவதற்கான நாமினி மாற்றம் செய்ய விதிமுறைகளில் தளர்வு செய்ய வாய்ப்பு வழங்கும் வகையில் மாற்றி அமைக்கப்படும். திருமலையில் தற்போதை நிலவரப்படி தண்ணீர் நிலுவை 120 நாளுக்கு தேவையான அளவு உள்ளது. மேற்கொண்டு நாட்களுக்கு பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓய்வுப்பெற்ற மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க ரூ 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். இதில் செயல் அதிகாரி ரவிசந்திரா, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி, மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அடி தூள்...!! - இனி அரசு மருத்துவமனைக்கு போறீங்களா?... இதை கட்டாயம் கொண்டு செல்லக்கூடாது...!