என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைவதை டிடிவி தினகரன் இன்று உறுதிப்படுத்தினார். நல்லாட்சி கொண்டு வருவதற்காக இணைவதாக அறிவித்தார். இதன்மூலம் அதிமுக தலைமையிலான என்டிஏவில் அமமுக இடம்பெற்றுள்ளது. ஜனவரி 23 அன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் அமமுக பங்கேற்கும் என கூறப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் NDA கூட்டணியில் இணைவதாக அறிவித்த டிடிவி தினகரன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்தார்.
இதன்பிறகு பியூஷ் கோயல் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய பியூஷ் கோயல், பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். டிடிவி தினகரனின் வருகை தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாங்கள் விட்டுக்கொடுத்து, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறந்துவிட்டு அம்மாவின் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக மீண்டும் முழு மனதுடன் வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: WELCOME BACK..! ஏன்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைந்த டிடிவி தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு...!
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா மூலம் தமிழ்நாட்டில் NDA கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்ற முயற்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக இணைந்துள்ளோம் என கூறினார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல என்றும் கஞ்சா மாடல் ஆட்சி எனவும் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே மீண்டும் NDA கூட்டணியில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: மீண்டும் NDA கூட்டணியில் அமமுக..! TTV தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!