அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது எனக்கூறி என் டி ஏ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறியது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீதும் கடுமையான குற்றச்சாட்டை டிடிவி தினகரன் முன்வைத்து வந்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் யாருடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி வைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தினார். நல்லாட்சி கொண்டு வருவதற்காக இணைவதாக அறிவித்தார்.

இதன்மூலம் அதிமுக தலைமையிலான என்டிஏவில் அமமுக இடம்பெற்றுள்ளது. ஜனவரி 23 அன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் அமமுக பங்கேற்கும் என கூறப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் NDA கூட்டணியில் இணைவதாக அறிவித்த டிடிவி தினகரன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து பியூஷ் கோயல் வரவேற்றார். இந்த நிலையில் nda கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவில் இணைந்தது ஏன்? OPS இதை செய்யவில்லை..! வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!
தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அன்போடு வரவேற்று, அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போக்சோ வழக்கு... சட்டம் ஒழுங்கு சீர்கேடு..! சட்டசபை வளாகத்தில் இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு..!