கரூரில் நடந்த துயரச் சம்பவம் போல் மீண்டும் ஒரு நிகழ்வு நடைபெறாமல் தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகளையும் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ரோடு சோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஒதுக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை என்றும் அவர் ஏழு மணி நேரம் தாமதமாக வந்ததால்தான் இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஒதுக்க வேண்டும் என்றும் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட கட்சி தலைவர், ரோடு ஷோவில் பேசுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு சாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோக்களை பார்க்கும்போது வேதனை அளிப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இரண்டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். HIT AND RUN வடக்கு ஏன் பதியப்படவில்லை என்றும் விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா என்று நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா என தமிழக அரசை நோக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். வழக்குப்பதிய என்ன தடை என்றும் புகார் இல்லாவிட்டாலும் வழக்குப் பதிய வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். விஜய் பிரச்சார வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கரூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது என்றும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் அரசு அமைதியாக இருக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூர் செல்ல தயார்? சிக்னல் கொடுத்த விஜய்… 20 பேர் கொண்ட குழு நியமனம்…!
தமிழக வெற்றி கழகம் என்ன மாதிரியான கட்சி, அந்த இடத்தில் இருந்து அனைவரும் பறந்து விட்டனர் என வேதனை தெரிவித்தார் நீதிபதி. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க யார் தடுத்தார்கள் என்றும் குடிநீர் வழங்குவதற்கு கூட என் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எனவும் மக்களை கைவிட்டு தலைவரும் ஏற்பாட்டாளர்களும் பொறுப்பற்ற முறையில் வெளியேறி உள்ளதாகவும் கூறினார். அவர்களுடைய தொண்டர்களை விட்டு விட்டார்கள் என்றும் தலைமை பண்பே கிடையாது எனவும் சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தமிழக வெற்றி கழகத்திற்கு தனது கண்டனத்தையும் நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக அடாவடி..! சாட்டையை சுழற்றும் நீதிமன்றம்… மாவட்டச் செயலாளரின் முன் ஜாமீன் தள்ளுபடி…!