தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தோழமை கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.. இந்தக் கூட்டத்திற்கு தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தவெக அரசுக்கு ஆதரவு அளித்துவரும் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் இன்று முடிந்தது. மாலை 4 மணிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி அமைச்சர் வன்னியரசு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், எம்எல்ஏ சையது பாரூக், எம்பி நவாஸ் கனி உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தோழமைக் கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், யாரெல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்துள்ளோமோ அவர்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். இந்தியா கூட்டணி குறித்த கேள்விக்கு நாங்கள் தமிழ்நாடு அரசியலை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று பதில் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரட்டும் என்றும் அதன் பிறகு அதைப் பற்றி பேசலாம் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அல்லேரி நீரேற்று திட்டம்..! ஜவ்வாது மலையை தாரை வார்ப்பதா.? சீமான் ஆவேசம்.!!
முதலமைச்சர் விஜய் உடனான ஆலோசனை முடிந்த பின்னர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்த கட்சிகளை தோழமைக் கட்சிகளாக உறுதி செய்து கூட்டணிக்கு பெயர் வைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் விசிக எம் பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி கூட்டணியின் பெயர் குறித்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பார் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 7 தொகுதிகளின் இடைத்தேர்தல்... கூட்டணிக்கு என்ன பெயர்..? CM விஜய் தலைமையில் தொடங்கிய தோழமைக் கட்சிகள் கூட்டம்..!!