2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி உள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை மும்முரமாக நடைபெற்ற முடிந்தன. எந்தெந்த தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பது அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமான வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் சென்னை தி.நகர் தொகுதி வேட்பாளராக களமிறங்கியுள்ள என்.ஆனந்த், திரைப்படத் துறையில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் ஸ்டண்ட் கலைஞர்களின் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், ஸ்டண்ட் யூனியன் நிர்வாகிகளை நேரில் சந்தித்த என்.ஆனந்த், அவர்களின் பிரச்சினைகளை உன்னிப்பாகக் கேட்டறிந்தார். திரைப்பட படப்பிடிப்புகளின்போது உயிர் ஆபத்தை எதிர்நோக்கி, துணிச்சலுடன் ஸ்டண்ட் காட்சிகளைச் செய்யும் இந்தக் கலைஞர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தான் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார். "உயிரைப் பணயம் வைப்பவர்களுக்கு உதவத் தயார்" என்ற உணர்வுடன் அவர் பேசியது.
இதையும் படிங்க: மாவீரன் தீரன் சின்னமலை பிறந்தநாள்..! தியாகத்தை போற்றுவோம்..! விஜய் புகழாரம்..!
யூனியன் நிர்வாகிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இந்த சந்திப்பின் போது, ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு, காப்பீடு, ஊதிய உரிமைகள், படப்பிடிப்பு நேரத்தில் ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை யூனியன் பிரதிநிதிகள் முன்வைத்தனர். என்.ஆனந்த் இந்த பிரச்சினைகளை தீவிரமாகப் பரிசீலித்து, த.வெ.க சார்பில் அவற்றுக்கு தீர்வு காண உதவுவதாக உறுதி அளித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: அண்ணனே சொல்லிட்டாரு..! விஜய் சொன்ன ஒரே வார்த்தை..! ட்ரெண்டாகும் விசில் கோலம்..!