திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும் தவெக பூந்தமல்லி சட்டமன்ற வேட்பாளருமான பிரகாசம் என்கிற குட்டி மீது மகளிர் அணி நிர்வாகி சங்கீதா எஸ்.பி. யிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். இதனால் ஆறு பிரிவுகளின் கீழ் வேட்பாளர் பிரகாசம் என்கிற குட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொய்யான புகார் கொடுத்து வேட்பாளருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி வேட்பாளரின் மனைவி மற்றும் மகளிர் அணியினர் சங்கீதா மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.
அதில் கணவரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எஸ்பி இடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் சங்கீதா உள்ளிட்ட 7 பேர் மிக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொய்யான புகார் கொடுத்த சங்கீதா உள்ளிட்ட 7 பேரை கைது செய்யக் கோரி தவெக மகளிர் அணியினர், மனு கொடுத்தனர். இந்த நிலையில், பாலியல் சீண்டல் புகாருக்கு ஆளான பூந்தமல்லி தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரகாசம் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் ஆபாசமாக பேசுதல், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் உள்ள 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அவரை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்துவிடலாம் என அஞ்சி பிரகாசம் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். முன் ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி குமரப்பன் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: முதல் முறையாக விசில் சின்னத்தில் போட்டி...சொந்த ஊரில் பிரசாரத்தை தொடங்கிய செங்கோட்டையன்...!!
உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனின் மேலும் இரண்டு வாரம் காலத்திற்கு தினமும் காலை 10:30 மணிக்கு திருவள்ளுர் நகர காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் 20 ஆயிரம் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தேர்தல் வேட்டை: மைத்துனர் வீட்டில் பணத்தை பதுக்கிய தவெக வேட்பாளர்... கட்டுக்கட்டாய் சிக்கியது ரூ.50 லட்சம்...!