தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று மாலை மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாரபத்தி கிராமத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக முதல் நாள் இரவே தமிழகம் முழுவதும் இருந்து வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் குவிந்தனர்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு த.வெ.க உணவு தயார் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள் ஐந்து லட்சம் தண்ணீர் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டது. அதேபோல் மாநாட்டை சுற்றியும் பல்வேறு தற்காலிக உணவு ஸ்னாக்ஸ் கடைகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் 500 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கார் பார்க்கிங் மாநாடு நடைபெற்ற இடம் என எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகளாக காட்சியளிக்கிறது. மேலும் மாநாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 5000க்கும் மேற்பட்ட நாற்காலிகள் உடைக்கப்பட்டு மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. நாற்காலிகள் மட்டுமல்லாது தடுப்புகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக தொண்டன் கூட இப்படி சில்லிதனமா நடந்துக்க மாட்டார்! ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த அமைச்சர்..!
தடுப்பு வேலிகள் சாய்க்கப்பட்டு தண்ணீர் குழாய்கள் உடைக்கப்பட்டு மாநாட்டிற்கு நடைபெற்ற இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலணிகள், அதேபோல் சாலை முழுவதும் காலணிகள் சிதறி கிடக்கின்றன. மாநாட்டு திடலில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும், தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற்ற இடம் முழுவதும் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற இரண்டு, மூன்று நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது த.வெ.க மாநாடு நடைபெற்ற இடம் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க: சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த விஜய்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!