தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நடக்கும் இந்த மாநாட்டில் அலை கடலென தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார் விஜய். அப்போது, நமது ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும் ஒரே அரசியல் எதிரி திமுக தான் எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுப்பதாக கூறிய விஜய், பாசிச பாஜகவும் பாய்சன் திமுகவும் தான் எதிரி என கூறினார்.
மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் அவர்களே, தமிழ்நாட்டு மீனவர்கள் 800-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கப்படுவதாகவும், மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நீட் தேர்வால் ஏற்படும் என்ன நடக்கிறது என்பதை சொல்லும்போதே வலிக்கிறது என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

செய்வீர்களா தாமோதார் மோடிஜி அவர்களே என்று பேசிய விஜய், 2029 வரைக்கும் சொகுசு பயணம் போகலாம் என்று திட்டம் தீட்டி வைத்திருக்கிறீர்களா என்ற மோடியை சாடினார். குட்டிகரணமே போட்டாலும் தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள் என கேட்டார். கீழடி ஆதாரங்களை அழித்து உள்ளடி வேலை செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் என்று தெரிவித்த விஜய்., எங்கள் மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறினார். எங்களுக்கு தேவையானதை எல்லாம் செய்யாமல் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருக்கிறார் என்று கூறினார்.
இதையும் படிங்க: அப்பாடா விஜயை பார்த்தாச்சு! கொத்து கொத்தாக கலையும் கூட்டம்... காலியாகும் திடல்
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான மதுரை மண்ணிலிருந்து கூறுகிறேன்., உங்கள் எண்ணம் ஈடேராது என தெரிவித்தார். என்ன வேஷம் போட்டு கொண்டு பாஜக தமிழகத்தில் வந்தாலும் அவர்களின் வித்தை எல்லாம் ஈடேறாது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தலைவா… வந்துட்டியா! ஆரவாரத்தில் தடுப்புகளை தாண்டி எகிறி குதித்த தொண்டர்கள்...