ஆரணி அருகே லிப்ட் கொடுப்பது போல் நடித்து மூதாட்டியிடம் தாக்கி 3 சவரன் தங்க நகையை பறித்த பட்டதாரி தவெக பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தவெக மாநாட்டிற்கு சென்றதால் கடன் சுமை ஏற்பட்டு நிலையில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதா போலீசாரின் விசாரணையில் தகவல்.
ஆரணி அடுத்த ஒண்டி குடிசை கிராமத்தை சேர்ந்த மூதாட்டி மலர் (61) இவர் கணவரை இழந்து தனியார் கிராமத்தில் வசித்து வருகின்றார். மேலும் சென்னையில் உள்ள தனது மகன் சீனிவாசனை பார்த்து விட்டு மீண்டும் தனது சொந்த கிராமத்திற்கு செல்ல கடந்த 10ம் தேதி அப்பந்தங்கள் கூட்ரோடு அருகில் இறங்கி தனது கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது பைக்கில் வந்த டிப்டாப் ஆசாமி மொரபந்தாங்கல் கிராமத்துக்கு செல்வதாகவும் கூறி மூதாட்டிக்கு தனது பைக்கில் லிப்ட் கொடுத்துள்ளார். இதனையடுத்து மொரப்பந்தாங்கல் கிராமம் அருகில் வரும்போது திடீரென பைக்கை நிறுத்திவிட்டு பைக்குக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாகவும் கூறி மூதாட்டியை இறக்கி விட்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING ஓசூரில் பரபரப்பு... தவாக நிர்வாகி ஓட, ஓட வெட்டிக்கொலை... திடுக்கிடும் பின்னணி...!
பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டி கழுத்து அணியிருந்த 3 சவரன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார். மூதாட்டி மலர் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த டிப் டாப் ஆசாமி மூதாட்டியை தாக்கி கீழே தள்ளி கழுத்து அணிந்திருந்த 3சவரன் தங்க நகையை பறித்துச்
சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மூதாட்டி மலர் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பந்தாங்கலல் கூட்ரோடில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தனர்.
இதில் ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழகம் பிரமுகர் கௌதம்(30) என்பதும் ஆரணி தனிப்படை போலீசார் குற்றவாளி மீது வழக்கு பதிந்து 3 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து நீதிமன்ற நீதிபதி முன்னிiயில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் திருச்சி மாநாடு தமிழக வெற்றி கழகம் நிகழ்ச்சிக்கு சென்றதால் கடன் சுமை ஏற்பட்டன. இதனால் மூதாட்டியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக தமிழக வெற்றி கழகம் பிரமுகர் கௌதம் விசாரணiயில் தெரிவித்தான்.
இதையும் படிங்க: சீமானுக்கு அவ்வளவுதான் லிமிட்... நடவடிக்கை எடுங்க! தவெகவினர் போலீசில் புகார்