தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது திரை வாழ்க்கையின் மூலம் தமிழக மக்களின் இதயங்களை கைப்பற்றியவர். ஆனால், அவரது அரசியல் பயணம் தொடங்கியபோது, அந்த ரசிகர்களின் அன்பு இன்னும் ஆழமான, உணர்ச்சிகரமான வடிவத்தை அடைந்தது. 2024 பிப்ரவரி 2 அன்று தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியபோது, விஜயின் ரசிகர்கள் அது வெறும் கட்சி அல்ல, அவர்களின் கனவுகளுக்கான ஒரு இயக்கம் என்று உணர்ந்தனர்.
இந்த அன்பு, வெறும் பட ரசிகர்களின் உற்சாகத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படை உருவாகி, ஆதரவு பெற்றுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து சந்திக்கும் என்று தகவல் கசிந்தது.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகிவிடும் என்றும் புதிதாக உருவாகியுள்ள தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்றும் கூறப்பட்டது. இது தொடர்பான கருத்துக்களை காங்கிரஸ் கட்சியை நேரம் தமிழக வெற்றி கழகத்தினரும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர்..! அதிமுகவின் கூட்டணி அழைப்பை நிராகரித்தது தவெக… தலையில் இறங்கிய இடி…!
இந்த நிலையில், ராகுல் காந்தியும் விஜயும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியதாக கசிந்த தகவல் தவறானது என தமிழக வெற்றி கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியது குறித்த தகவல் பொய் என்று கூறினார்.
இதையும் படிங்க: விஜய் தாமதத்திற்கு இதுதான் காரணம்! தவெக நிர்வாகிகள் ஓடிவிட்டார்களா? நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி...!