தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பனையூர் அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை தூத்துக்குடி நிர்வாகி அஜிதா ஆக்னல் மற்றும் பிற நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் மற்றும் பவுன்சர்கள் அவர்களை அப்புறப்படுத்தி தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் காரை கட்சி அலுவலகத்திற்குள் செல்ல வைத்தனர்.
மெதுவாக மோதி தள்ளியபடி கார் சென்றது. தனக்கு பொறுப்பு வழங்கவில்லை எனக் கூறி அஜிதா ஆக்னல் மன வருத்தத்துடன் கண்ணீர் சிந்தினார். பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைத்த தன்னை ஒதுக்கி உள்ளதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

விஜயின் காரை வழிமறித்த பெண் நிர்வாகியை அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமைதியாக இருங்கள் என்றும் விஜய்யிடம் பேசிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து அவர்களை அமைதி படுத்தியதாக கூறப்பட்டது. தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஜனநாயகம் உள்ள கட்சி என அக்கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: உழைப்புக்கு இதுதான் சன்மானமா? விஜய் காரை முற்றுகையிட்ட தவெகவினர்... பனையூரில் பரபரப்பு...!
இந்த நிலையில், சமாதானத்தை ஏற்காமல் விஜயின் காரை வழிமறித்த தவெகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தவெக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். என்ன நடந்தாலும் நியாயம் கிடைக்கும் வரை நகர மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி உள்ளனர். கட்சிக்காக உழைத்தவர்கள் நாங்கள் என்றும் நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: எவ்ளோ உழைச்சிருக்கோம்...! இதெல்லாம் நியாயமா? பனையூரில் கண்ணீருடன் முறையிட காத்திருக்கும் பெண் நிர்வாகி...!