அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போரின் கால அளவு குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிரடியான பதிலை அளித்துள்ளார். போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு, “அதை என்னால் உங்களிடம் சொல்ல இயலாது. அதாவது, எனக்கு ஒரு கணிப்பு உள்ளது; ஆனால் அதைத் தெரிந்துகொள்வதால் என்ன பயன் இருக்கப்போகிறது?” என்று கூறினார்.
மேலும், “அது எவ்வளவு காலம் அவசியமோ அவ்வளவு காலம் நீடிக்கும். அவர்கள் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டனர். அந்த நாடு மிக மோசமான நிலையில் உள்ளது” என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
மத்திய கிழக்கிலும் உலக அளவிலும் அணு ஆயுத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்ததாகவும், தற்போது அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத ஆதிக்க நிலையில் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இப்பிடி ஒரு ராணுவத்தை யாருமே பாத்துருக்க மாட்டாங்க!! அமெரிக்காவின் வலிமைக்கு ஈடு இணையே இல்ல! ட்ரம்ப் தம்பட்டம்!

ஈரானின் கடற்படை அழிந்துவிட்டது, விமானப்படை அழிந்துவிட்டது, ராணுவத்தின் பெரும்பகுதியும் சேதமடைந்துள்ளது, ரேடார் வசதிகள் இல்லாமல் போய்விட்டன என்று டிரம்ப் விவரித்தார். இன்று மிகக் கடுமையான, சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் கூறினார்.
ஈரானுடனான போரில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இலக்குகள் சற்று வேறுபடலாம் என்றாலும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூட அமெரிக்காவின் வல்லமைக்கு ஈடானது உலகில் இல்லை என்று ஒப்புக்கொள்வார் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
தனது முதல் பதவிக்காலத்திலேயே அமெரிக்க ராணுவத்தை மிக வலிமையானதாகக் கட்டமைத்ததாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். ஈரான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், போரின் முடிவு குறித்து தெளிவான காலக்கெடு இல்லை என்பதை டிரம்ப் தனது பதிலால் உறுதிப்படுத்தியுள்ளார். உலக நாடுகள் இப்போர் எப்போது முடிவடையும், அதன் விளைவுகள் என்ன என்பதை உற்று நோக்கி வருகின்றன.
இதையும் படிங்க: ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!! கோரமுகம்!! அதிபர் ட்ரம்பின் போருக்கு அமெரிக்க பார்லி., ஆதரவு!!