சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தவெக அரசு தீர்மானம் கொண்டு வந்துள்ள செயல் ஜனநாயகத்தின் மாண்பைச் சிதைக்கும் முயற்சியாகும்; இத் தீர்மானம் தமிழகத்தின் எதிர்கால நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு என்பதுதான் ஜனநாயகத்தின் முதன்மை அடிப்படையாகும். மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் சீரமைக்கப்பட்டுப் பிரிக்கப்படும் போதுதான், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும். இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது மட்டுமல்ல, மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, தொகுதி மறுவரையறையின் போது எந்தவொரு மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்படும் என்று பலமுறை தெளிவாக உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு! நயினார் நாகேந்திரன் மீதான குற்றச்சாட்டு பதிவுக்கு உயர் நீதிமன்றம் தடை!
மத்திய அரசின் உறுதியை மீறி, தவெக அரசு இத்தகைய சீர்திருத்தங்களைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பது தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. எனவே, முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தனது இத் தீர்மான முடிவினை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும், என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் மனம்வருந்தி மன்னிப்பு கேட்கணும்! அமைச்சர் மரியவில்சனுக்கு சீமான் எச்சரிக்கை!