தமிழகத்தில் இதுவரை இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு இடையில் நடைபெற்ற தேர்தல்கள், இம்முறை புதிய அரசியல் சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளன. தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம், விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
முன்னணி திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது துருவமாக உருவெடுத்த த.வெ.க., விஜய்யின் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்தி வந்தார்.

சட்டமன்றத் தேர்தலில் யாருமே எதிர்பாக்காத வகையில் மாபெரும் வெற்றியை தனித்து நின்று பெற்று இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். இன்னும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: காங். தொண்டர்கள் ஏற்கனவே Tvk கூட்டணியை விரும்புனாங்க..! கிரிஷ் ஜோடங்கர் கருத்தால் சலசலப்பு..!
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற கட்சி தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய், முதலமைச்சர் ஆக பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து எம்எல்ஏக்களின் ஏகோபித்த ஆதாரத்துடன் விஜய் சட்டமன்ற கட்சிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் எங்க வீட்டு பையன்..! MLA வெற்றிச் சான்றை பெற்ற பின் பிரேமலதா வாழ்த்து..!!