தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்தது. வாக்குகள் என்று எண்ணப்பட்ட நிலையில் தமிழகம் ஒற்றுநோக்கி இருந்தது. தமிழக அரசியலையே புரட்டிப்போட்ட நிகழ்வாக தமிழக வெற்றி கழகத்திற்கு அமோகமான வெற்றி கிடைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கும் கட்சியின் தலைவர் விஜய்க்கும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உங்கள் தீர்ப்புக்காக தமிழக மக்களுக்கு என் வணக்கங்கள் என்று கூறினார். என் நாட்டில், மக்கள் ஒரே குரலில் எழுந்து பேசியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி என்றும் வாக்குகள் விலைக்கு வாங்க வேண்டாம், வம்ச அரசியலுக்கு வேண்டாம், அரசியலில் ஒரு தலைமுறை மாற்றத்திற்கு ஆம். இதைச் செய்து முடிப்பவர் உண்மையில் அனைவருக்கும் ஒரு நன்மையைச் செய்துள்ளார் என்று கூறினார்.

தமிழக அரசியலில் ஒரு அற்புதமான அறிமுகத்திற்காக தவெக மற்றும் கட்சியின் தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார். நீங்கள் செய்ய நினைப்பதைச் செய்ய எல்லாம் வல்ல இறைவன் உங்களுடன் இருக்கட்டும் என்றும் மேலும் அனைத்து NDA வேட்பாளர்களுக்கும், இது களத்தில் ஒரு கடுமையான போராட்டமாக இருந்தது என்றார்.
இதையும் படிங்க: தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: முடிவுக்கு வந்தது 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கம்..!!
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள், இந்த முறை வெற்றியைப் பதிவு செய்ய முடியாதவர்கள், தொடர்ந்து போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்காக ஸ்டாலின் மற்றும் சீமான் ஆகியோருக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். களத்தில் கடுமையாக உழைத்த தமிழக பாஜக தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #TNElectionResults2026: தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் லீடிங்... மாதவரம் தவெக வேட்பாளர் தான் டாப்பு... வியக்க வைக்கும் மேஜிக் நம்பர்...!!