தமிழக வெற்றிக் கழகத்தின் கழக அமைப்பு, கழகப் பணிகளை இன்னும் சிறப்பாகவும் திறம்படவும் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான அமைப்பாகும். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு, கழகத்தின் அடிப்படை அமைப்பு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவினை, பாரம்பரிய மாவட்ட எல்லைகளை மீறி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் நிலைமைகள், மக்கள் தொகை, புவியியல் அமைப்பு மற்றும் அரசியல் தேவைகளை கணக்கில் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கழகத்தின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த பணிகள் அடிமட்ட மக்களை நேரடியாகச் சென்றடையும் வகையில் ஒரு வலுவான தொடர்பு வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டு இருப்பதாக தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயை நம்பி கெட்டதா சரித்திரமே இல்ல..! CM கரூருக்கு போறாரு !! அமைச்சர் ஆனந்த் பெருமிதம்.!
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருநெல்வேலி வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் விஜய் கூறியுள்ளார். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: உண்மையை சொன்னா துரோகியா..? EPS எடுத்த தவறான முடிவு..! M.R. விஜயபாஸ்கர் வேதனை..!!