கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. நாளை நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்ச்சியை சீராகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடம் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேடைக்கு வலது புறத்தில் பொதுமக்கள் வரிசையாக உள்ளே நுழையக்கூடிய ஒரு வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேடைக்கு அருகிலுள்ள இடது புறத்தில் முதலமைச்சர் வருகைக்கென தனி வழி ஒதுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி தளத்தைச் சுற்றிலும் இரண்டு அடுக்குகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்று சுவரில் இருந்து உள்ளே வர ஒரு வழி ஏற்பாடு செய்யப்பட்டு, உள்ளே நுழைந்த பிறகு முதல் அடுக்கு தடுப்பு அருகே தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் இரண்டு வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அமர்விடங்களைப் பொறுத்தவரை, 10,000 பேர் அமரக்கூடிய அளவுக்கு இடம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு கருதி 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்காக 40 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்ட 16 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 315 நபர்கள் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.காலை 8 மணி முதல் பங்கேற்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: கரூர் அரசு வேலை விவகாரம்... மீண்டும் ஹை கோர்ட்டில் எதிர்ப்பு மனு..! விஜய் அரசுக்கு சவால்..!!
முதலமைச்சர் காலை 11 மணிக்கு நிகழ்ச்சியைத் தொடங்க உள்ளார். 20,000 பேருக்கு போதுமான அளவில் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் இருப்பதால், அவற்றின் மீது யாரும் ஏறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பொதுமக்களின் வசதி மற்றும் பாதுகாப்பை முன்னிட்டு திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் திமுக இடையீடு..!! இன்று விசாரணை..!!