பேசாத ஒன்றைப் பேசியதாகப் பொய் வழக்குப் போட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, காவல்துறையை ஏவிக் கைது செய்துள்ளது ஆணவ அடக்குமுறை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவையில் எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலினை எதிர்கொள்ளத் துணிச்சலற்ற கோழை த.வெ.க. அரசு காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்துள்ளதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்வதாக கூறினார்.
நேற்று தஞ்சையில் விவசாயிகளுக்காகக் கழகம் எழுப்பிய கோரிக்கைகள் குறித்து வாய்திறக்காத அரசு, அந்தப் போராட்டத்தின் எழுச்சியைப் பார்த்து தொடை நடுங்கி, ஜனநாயகத்தின் முக்கியத் தூணான எதிர்க்கட்சித் தலைவரையே அடிப்படையற்ற பொய் வழக்கில் கைது செய்துள்ளது அராஜகத்தின் உச்சகட்டம் என்றார். மிக மோசமான ஜனநாயகப் படுகொலை என்றும் கூறினார்.

“இம்” என்றால் சிறைவாசம் என்ற ஆணவத்தைப் பிரதிபலிக்கும் அடக்குமுறைகள், பாலியல் வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க. நிர்வாகிகள், எல்லாவற்றுக்கும் மேல் டெல்டா விவசாயிகள் கண்ணீர் சிந்த வைக்கும் காவிரிப் பிரச்சினையில் முதலமைச்சரின் மவுனமும் மெத்தனமும் என எதிர்க்கட்சித் தலைவர் நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எழுப்பவுள்ள கேள்விகளுக்கு இன்றே அஞ்சி நடுங்கி, தஞ்சாவூரில் பேசாத ஒன்றைப் பேசியதாகப் புனைந்து, கற்பனைக் குற்றச்சாட்டின் அடிப்படையில் எப்.ஐ.ஆர் ஒன்றைப் போட்டு, உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மீறி அவசர அவசரமாகக் கைது செய்துள்ளது அடாவடி தவெக அரசு என்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நாங்க டச்சு கூட பண்ணதில்ல... ஜெயலலிதா பெயரை சொல்லி தவெகவுக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்...!
நாங்கள் இதையும் சந்திப்போம், எதையும் சந்திப்போம் என்று கூறியுள்ள துரைமுருகன், சட்டப்பேரவையில் பதில் சொல்லாவிட்டாலும் மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உதயநிதி கைது விவகாரம்... 'சட்டமன்றத்தில் பங்கேற்க விடாமல் செய்த கோழைத்தனம்' - கனிமொழி கடும் கண்டனம்!