2017-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது சிறுமியாக இருந்த ஒரு பெண்ணை அப்போதைய பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு அரசியல் செல்வாக்கு, காவல் துறை அலட்சியம், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மீதான தாக்குதல்கள் என பல சர்ச்சைகளைச் சந்தித்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவலில் இறந்தது, சிறுமி விபத்தில் சிக்கியது போன்ற சம்பவங்கள் நாட்டின் கவனத்தை ஈர்த்தன.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டு, 2019-ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றம் குல்தீப் சிங் செங்காரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்டவரின் தந்தையின் காவல் மரண வழக்கிலும் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. செங்கார் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், டிசம்பர் 23 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு அதிர்ச்சியூட்டும் தீர்ப்பை வழங்கியது. செங்காரின் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் வரை அவரது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.

நீதிமன்றம், செங்கார் ஏற்கனவே 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததை காரணமாகக் கூறியது. மேலும், அவர் எம்.எல்.ஏ. என்ற முறையில் 'பொது ஊழியர்' என்ற வரையறைக்குள் வரமாட்டார் எனக் கூறி, போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளைப் பொருந்தாது எனத் தீர்மானித்தது. இருப்பினும், கடுமையான நிபந்தனைகளை விதித்தது. பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வரக்கூடாது, அவரது குடும்பத்தினரை அச்சுறுத்தக்கூடாது, டெல்லியிலேயே தங்க வேண்டும் போன்றவை. இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அடப்பாவி... ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்...! அதிரடி சஸ்பென்ட்...!
குற்றவாளியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறையீடு செய்துள்ளார். அதுமட்டுமல்லாது டெல்லி இந்தியா கேட் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: BIKE- ல ஏறலனா அவ்ளோ தான்.! டியூஷன் போன சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை... ஆசிரியர் போக்சோவில் கைது...!