சேலத்தில் நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சனம் செய்து. பெண்களை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரம் குறித்து சுட்டிக்காட்டினார். ஆச்சரியக்குறிகளா இல்லை ஆபாசப் பொறுக்கிகளா என முதல்வர் விஜய்க்கு பாஜக முன்னாள் MLA வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்து, தங்களது கட்சிப் பிரமுகர் ஒருவர் மிரட்டியதாக வெளிவந்துள்ள செய்தியை அறிவீர்களா? என்று கேட்டுள்ளார். ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் பல்லி, கழனிப் பானையில் விழுந்தததாம் துள்ளி என்னும் கதையாக, "தூய சக்தி, மாற்று சக்தி" என்று முழங்கிவிட்டு, பெண்கள் விரோத திமுகவின் புது வெர்ஷனாகவே தங்களது தவெக முளைத்துள்ளதே, இதற்கு என்ன பதில் என்று கேட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே ஆலந்தூர் வேம்புலி, சேலம் மணிகண்டன் எனத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை களவாடும் நபர்கள் அனைவரும் தவெகவைச் சார்ந்தவராக இருக்கும் நிலையில், இன்னும் எத்தனை எத்தனை கொடூரர்களை தவெக வளர்த்து வருகிறது என்றும் தவெகவில் பெண்களுக்கு எதிரான குற்றவாளிகளுக்கு ஆதரவளிக்கும் அந்த "மேலிடம்" யார்.? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அந்த கயிறு கண்ணை உறுத்துதோ.? இந்துக்கள் மீதான வெறுப்பு... தவெகவை விளாசிய வானதி சீனிவாசன்..!!
மொத்தத்தில், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் அதிரடிப் படையைவிட, தங்கள் கட்சியின் ஆபாசப் பொறுக்கிப் படையை அழித்தொழிப்பதே முக்கிய தேவை என்றும் கூறினார். அதனை முதலில் நிறைவேற்றுங்கள் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் நல்ல நேரம் வரலையா முதல்வரே..? சிங்கப்பெண் அதிரடிப்படை.... விளாசிய வானதி சீனிவாசன்..!!