மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள 'ஜில்லா மணி' என்பவர், தந்தை வயதுள்ள ஒரு முதியவரை காருக்குள் வைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டியும், வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கியும் செய்த செயல் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை காட்டுமிராண்டித்தனமான செயல் என பாஜக முன்னாள் MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ள 'ஜில்லா மணி' என்பவர் முதியவர் ஒருவரை காரில் வைத்து தாக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.

ஆனால் அது பழைய வீடியோ என்று விளக்கம் அளிப்பதால் மட்டும் இந்த மனிதாபிமானமற்ற செயல் நியாயமாகிவிடாது என்றார். தந்தை வயதுள்ள முதியவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாக்கி அதனை செல்போனில் வீடியோ எடுத்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அரசு வேலை..! விஜய் அரசுக்கு வானதி சீனிவாசன் டிமாண்ட்..!!
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சமத்துவம் பேசும் தவெக-வின் கொள்கை வெறும் முழக்கம் மட்டும் தானா? என முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார் . தலைமை உடனடியாக 'ஜில்லா மணி' மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக அரசு முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!