பாஜகவின் தமிழகப் பயணம் 1980களின் முற்பகுதியில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் வேரூன்றிய இக்கட்சி, தமிழகத்தில் திராவிட அரசியலின் சவால்களை எதிர்கொண்டது. 1984 லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 1996இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி. வேலாயுதம் என்பவரை எம்எல்ஏ ஆக்கியது அதன் முதல் மைல்கல். இது மிகுந்த சமூக பிரச்சினைகள், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்களைப் பயன்படுத்தியதன் விளைவு.
தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான 1998க்குப் பின், பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1999, 2004, 2014 தேர்தல்களில் சில இடங்களைப் பெற்றது. ஆனால், திராவிட இயக்கத்தின் சமூக நீதி, தமிழ் அடையாளம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தன. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியிலும், பாஜக தனித்து ஒரு தொகுதியை மட்டுமே வென்றது.

இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி மீண்டும் அறிவித்தார்.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைவதற்கான சாத்தியத்தை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இது திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கான ஒரு பெரிய திட்டமாகவே அவர் கருதுகிறார்.
இதையும் படிங்க: மோடிஜிக்கு நன்றி சொல்லுங்க... பலகாரக் கடைக்கு விசிட் அடித்த வானதி ஸ்ரீனிவாசன்...!
இந்த நிலையில், இதற்கு மேல் ஸ்ட்ராங்கான ஆளுங்க எங்கள் கூட்டணிக்கு வர உள்ளதாக பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்தார். ஸ்டிராங்கான ஆள்னா விஜயா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பதில் அளித்தார். நீங்க ஸ்டிராங்கான ஆள்னு யாரையெல்லாம் நினைக்கறீங்களோ, அவங்கள எல்லாம் வச்சுக்கோங்க என்று சூசகமாக பேசினார்.
இதையும் படிங்க: 25 ஆண்டு கால வரலாற்று சாதனை... வாழ்த்துகள் மோடி ஜி! இபிஎஸ் உற்சாகம்...!