இன்று அமலுக்கு வந்துள்ள அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் (GST 2.0) என அழைக்கப்படும் இந்த புதிய சீர்திருத்தங்கள், பிரதமர் நரேந்திர மோடியின் 79வது சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டவை. இவை பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவளிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஜிஎஸ்டி அமைப்பில் 5%, 12%, 18% மற்றும் 28% என நான்கு முக்கிய வரி அடுக்குகள் இருந்தன. இவை மிகவும் சிக்கலானவை எனக் கருதப்பட்டு, புதிய சீர்திருத்தங்களின் மூலம் இரண்டு முக்கிய அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட்டு உள்ளன. இதனால், 12% அடுக்கில் உள்ள 99% பொருட்கள் 5% அடுக்கிற்கும், 28% அடுக்கில் உள்ள 90% பொருட்கள் 18% அடுக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம், பொருட்களின் விலையைக் குறைத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், புகையிலை, பான் மசாலா, சர்க்கரை கலந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆடம்பர கார்கள் போன்ற பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு 40% என்ற புதிய வரி அடுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோவையில் உள்ள பலகார கடை ஒன்றுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சென்று ஜிஎஸ்டி சீரமைப்பு தொடர்பாக கடை உரிமையாளரிடம் உரையாடினார். அப்போது, ஸ்வீட், காரம் உள்ளிட்டவற்றின் விலை நிலவரத்தை கேட்டறிந்தார். பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும், பில் உள்ளிட்டவற்றில் விலை மாற்றம் அப்டேட் செய்யப்பட்டதாகவும் கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: GST 2.O எதிரொலி... ஆவின் பால் பொருட்கள் விலை குறைப்பு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
வாடிக்கையாளர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றதாக கூறிய அவர் மன நிறைவாக இருக்கிறது என்றார். அப்போது, இதுக்கு காரணம் யாருன்னு தெரியுமா மக்களுக்கு என்றும் மோடிஜிக்கு நன்றி சொல்லுங்க எனவும் வானதி ஸ்ரீனிவாசன் கூறினார்.
இதையும் படிங்க: மனசாட்சி இருக்கா? பிரதமர் மன்னிப்புக் கேட்கணும்... போர்க்கொடி தூக்கிய கார்கே...!