சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் வரும் மே (31)முப்பத்தி ஒன்றாம் தேதி மதசார்பின்மைக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற பாஜக அரசை கண்டித்து வக்பு திருத்தச் சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் திருச்சிராப்பள்ளியில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த இருக்கிறோம். லட்சக்கணக்கில் சிறுத்தைகள் பேரணியில் பங்கேற்றார்கள் என்றார்.

பஹல்காம் பகுதியிலே நடைபெற்ற பயங்கரவாத படுகொலை மிகுந்த துயரத்தை அளிக்கிறது. நம்முடைய பிரதமர் மோடி அவர்கள் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு விரைந்து நாடு விரும்பியவர் டெல்லிக்கு வந்து அமைச்சர்களோடு கலந்த ஆய்வு செய்துவிட்டு நேரடியாக பிஹாருக்கு சென்று விட்டார் என்பது வருத்தமளிக்கிறது.

பஹல்காமில் அங்கே நடந்த பயங்கரவாத படுகொலை யாராலும் நியாயப்படுத்த முடியாது வன்மையாக கண்டிக்கிறோம். அதன் பின்னணியை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஆனால் அதை காரணம் காட்டி நாட்டில் ஒரு பதற்றத்தை பாஜகவினர் உருவாக்கி வருகின்றனர். பாஜக அரசும் பாகிஸ்தானோடு போர் நடத்துவோம் என்கிற வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் சிந்து நதியை பாகிஸ்தான் பயன்பாட்டுக்கு விடமாட்டோம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம் என்று சொல்லுகிறார்.

இதையும் படிங்க: எல்லையில் தினமும் துப்பாக்கிச்சூடு.. 4 வது நாளாக தொடரும் பதற்றம்.. இந்தியா பதிலடி தீவிரம்..!
பாகிஸ்தானுடைய அமைச்சர் ஒருவர் சிந்து நதி பாகிஸ்தானுக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டால் நாங்கள் இந்தியா மீது போர் தொடுப்போம் அணு ஆயுதங்கள் தயாராக இருக்கின்றன என்று சொல்லக்கூடிய ஒரு சூழல் உருவாகி இருக்கிறது. பயங்கரவாதத்தை யார் தூண்டினாலும் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விட யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒரு போர் தேவையா என்பதை அதற்கான சூழலை உருவாக்க வேண்டுமா என்பதை இந்திய ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என்றார்.
இதையும் படிங்க: நாங்க யாருனு இன்னும் தெரியல.. அணு ஆயுதம் ரெடி.. இந்தியாவுக்கு பாக். அமைச்சர் பகிரங்க மிரட்டல்..!