2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் முழு வீச்சில் செயல்பட்டு வந்தது. முற்றிலும் முடங்கும் விதமாக கரூரில் நடந்த சம்பவம் ஏற்பட்டது. கரூர் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியது. அதிலிருந்து தமிழக வெற்றி கழகம் தற்போது மீண்டு வருகிறது.
கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் விஜய் சந்திக்க உள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளும் நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. அக்கட்சியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களை சட்டரீதியாக வெளியில் கொண்டு வரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நிர்வாகிகள் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமின் கேட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் விஜய் இறங்கி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு வந்த நேரத்தில்தான் கரூர் சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த மாதம் கடைசி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் சின்னம் பெறுவதற்காக தமிழக வெற்றி கழகம் விண்ணப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்யின் கரூர் பயணத்திற்கு அனுமதி?... ஆனால் அடுத்தடுத்து கட்டுப்பாடுகளை அள்ளிவீசிய காவல்துறை...!
கரூர் சம்பவத்தால் முடங்கிப் போன தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. மைக், பேட், போன்ற சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்திடம் கேட்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 41 உயிருக்கு யார் பொறுப்பு? விஜய் - செந்தில்பாலாஜி?! சிபிஐ வசம் செல்லும் கரூர் துயரம்?! வெளிவருமா உண்மை?