ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் நடிகருமான கருணாஸ், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: காரைக்குடியில நாம் தமிழர் கட்சி தலைவர் ,நடிகர் சீமான் போட்டியிடுறாங்க, சிவகங்கையில நடிகர் கருணாஸ் போட்டியிடறாங்க. ரெண்டு பேரும் நடிகர். பக்கத்து பக்கத்துல போட்டியிடறாங்க... அதை எப்படிபார்க்குறீங்க என கேட்ட போது காரைக்குடியில நடிகர் சீமான் போட்டியிடுறாரு. அவர் நடிகர், இயக்குனர். அதை விட்டுருங்க. அவர் வழக்கமா எல்லா தேர்தலிலேயும் தனித்துப் போட்டியிடுறாரு.
சிவகங்கையில போட்டி போடுறோம். சிவகங்கை வந்து நம்ம ஊராயிருச்சு. தெரிஞ்சோ தெரியாமலோ நான் வந்து கொரோனா காலகட்டங்கள்ல அங்கே ஒரு 14 ஏக்கர் இடத்தை வாங்கி, அதுல ஒரு 2000 கன்றுகள், செடிகளை நட்டு, அதுல ஏதோ கடலை, நெல்லுன்னு போட்டுக்கிட்டு நான் பாட்டுக்கு ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தேன்.
இதையும் படிங்க: பாஜகவின் "A TEAM" தான் திமுக... கல்விக்கடன் கொடுக்க வட்டிக்கடையா நடத்துறீங்க? சீமான் சரமாரி கேள்வி..!!
சரி, சின்னதா அதுக்குள்ள ஒரு வீட்டை கட்டலாம்னு வீட்டையும் கட்டினேன். இப்ப கடைசியா அண்ணன் வந்து எனக்கு அங்கேயே தொகுதியை கொடுத்து என்னை அந்த உள்ளூர்வாசியாவே மாத்திட்டாரு. முதல்ல அவருக்கு இந்த நேரத்துல, இந்த தருணத்துல நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன்.
விஜய்னால திமுகவுக்கு ஏதாவது பாதிப்பு வருமா?"என கேட்டதற்கு எந்த பாதிப்பும் வராது. விஜய் அவர்களுக்கான ரசிகர்களுடைய ஓட்டுகளை வாங்குவாரு. அவங்க அவங்க ஓட்டுகளை வாங்குவாங்க. அதே மாதிரி திராவிட முன்னேற்றக் கழகம், அதனுடைய கூட்டணிக் கட்சியாக, தோழமைக் கட்சிகளாக இருக்கக்கூடிய நம்ம மதச்சார்பற்ற இந்தக் கூட்டணி, அவங்களுடைய எல்லா வாக்குகளையும் வாங்கும்.
முக்குலத்தோர் சமுதாயத்தைப் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு ஒரு ஆளுக்கு தான் சீட் கிடைச்சிருக்கு. எம்எல்ஏவாக போட்டி போடுறதுக்கு. மத்த யாருக்குமே சீட் கிடைக்கல. அதான் இப்போ பிரச்சனையா இருக்கு. இந்த முக்குலத்தோர் புலிப்படையை உருவாக்குனவன் நான். புரியுதுங்களா? நான் வந்து வியாபார நோக்கத்திலேயோ, இல்ல அரசியல் நோக்கத்திலேயோ, இல்ல இதை வச்சு சம்பாதிக்கணுங்கிற எண்ணத்திலேயோ நான் இதுக்குள்ள வரல. தன்னால் இயன்றதை இயலாதவர்களுக்கு உதவி செய்யணும். நாம் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல, நமக்கு யாரும் தாழ்ந்தவர் அல்லங்கிற ஒரு சகோதரத்துவத்தை, மனிதநேயத்தைக் கற்றுக்கொடுத்த மகான் அவர்.
முக்குலத்தோர் சமூகத்துல மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களே அன்றைய காலகட்டத்தில் எனக்கு மட்டும்தான் சீட் கொடுத்தாங்க. நீங்க அதையும் புரிஞ்சுக்கணும். 2016-ல எத்தனையோ சமுதாய அமைப்புகள் இருந்தாலும் கூட, இந்த முக்குலத்தோர் சமூகத்துல கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இருந்தாலும் கூட, அன்றைக்கே 'ஒயிட் காலர்' (White collar)... கருணாஸ் இஸ் த ஒயிட் காலர்-னு சொல்லித்தான் எனக்கு சீட் கொடுத்தாங்க. அதே மாதிரிதான் இன்னைக்கு தளபதியார்கிட்டயும் நான் வாங்கி இருக்கேன்."
ஆனால் நம்ம வரவேற்கிறோம். எல்லாரையுமே வரவேற்கிறோம். ஏன், சின்னம்மாவை என்னை விடவா யாராவது
வரவேற்று இருக்கப்போறாங்க? என்னை விடவா நம்ம வந்து அந்த அம்மாவுக்கு செய்த துரோகத்தை என்னை விடவா இந்த உலகத்துக்கு எடுத்துச் சொல்லியிருக்கப் போறாங்க? ஆகவே, அவருடைய அரசியல் வருகையையும் நான் வரவேற்கிறேன். என்றார்
இதையும் படிங்க: ஆங்கிலம் கலந்து பேசினால் தொலைத்து விடுவேன் - கொலை வெறியுடன் பேசிய சீமான்...!