நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய், பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் அரசியல் நுழைவு குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தார்.
அவரது ரசிகர் அமைப்பான விஜய் மக்கள் இயக்கம், சமூக சேவைப் பணிகளுடன் அரசியல் ரீதியான செயல்பாடுகளையும் மேற்கொண்டு வந்தது. இறுதியாக, 2024 பிப்ரவரி 2-ஆம் தேதி, விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரை அறிவித்தார். இக்கட்சி 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எனவும், அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும் அறிவித்தார். அதே நேரத்தில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

கட்சியின் கொள்கைகளாக, சமூக நீதி, மதச்சார்பின்மை, ஊழலற்ற ஆட்சி, சாதியற்ற சமூகம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தினார் விஜய். பெரியார், அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களை கொள்கை வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டார். பாஜகவை ideologically எதிரியாகவும், திமுகவை politically எதிரியாகவும் குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் அடிப்படையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதே இலக்கு எனக் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: TVK நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி...! பரபரப்பு...!
விஜய் அரசியலில் புதிய அலையாக திகழ்வார் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், விஜய் போன்ற பெரிய நட்சத்திரம் அரசியலுக்கு வருவது மக்கள் சமூகத்தின் மீதான அக்கறையை காட்டுவதாக நடிகர் கிச்சா சுதீப் பாராட்டு தெரிவித்துள்ளார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அதை விட்டுவிட்டு மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் இல்லை என்றும் தெரிவித்தார். விஜயின் அரசியல் பயணம் புதிய மாற்றத்தை உருவாக்கும் அவரது தலைமைக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக கிச்சா சுதீப் தெரிவித்தார். ஈ பட நடிகர் கிச்சா சுதீப் விஜய் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நெகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
இதையும் படிங்க: அதிமுக முக்கிய பிரமுகர்கள் தவெகவில் ஐக்கியம்... செங்கோட்டையன் உறுதி...!