2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களை இருக்கிறது. இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வருகின்றனர். தங்களுடைய வாக்குறுதிகளை எடுத்துக் கூறியும் மக்களிடம் நம்பிக்கையை விதைத்தும் வருகின்றனர். இதற்கிடையில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். அவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு ஆதரவாக அவரது தாயும் விருதாச்சலம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளரும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரேமலதா விஜயகாந்த், தானே விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் நிலையில், மகனின் வெற்றிக்காக விருதுநகர் மாவட்டத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளால் மக்களை உற்சாகப்படுத்தினார். “விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை ஒப்படைக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி, தாய்மையின் உணர்வுடன் வாக்குகளை கோரினார். இந்தப் பேச்சு பலரின் கவனத்தை ஈர்த்தது, ஏனெனில் அது கேப்டன் விஜயகாந்தின் பாரம்பரியத்தைத் தொடரும் மகனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் அமைந்திருந்தது. தொடர்ந்து விருதுநகரில்
இதையும் படிங்க: விருதுநகரில் விஜயபிரபாகரன் தான் ஜெயிப்பார்..!! அடித்துச் சொல்லும் மாணிக்கம் தாகூர்..!!
பரப்புரையின் போது பிரேமலதா, விருதுநகர் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களை வலியுறுத்தினார். விஜய பிரபாகரன் வெற்றி பெற்றால் கௌசிகா ஆற்றின் மீது உயர் மட்டப் பாலம், சாத்தூர் நோக்கிய நான்கு வழிச் சாலை, புல்லலக்கோட்டை இணைப்புச் சாலை, அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவார் என்று உறுதியளித்தார். விஜய பிரபாகரன் விருதுநகரில் வீடு எடுத்து தங்க இருக்கிறார் என்றும் அதனால் சென்னையில் அவர் தங்குவார் எப்படி சந்திப்பது என்ற கவலை எல்லாம் தேவையில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விருதுநகரில் களமிறங்கும் விஜய பிரபாகரன்... கோயிலில் வழிபட்டு பிரச்சாரம்... உற்சாக வரவேற்பு..!!