விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர். இன்றுடன் அரசு வழங்கிய ஒருநாள் கூடுதல் விடுமுறை நிறைவடைவதாலும், சென்னையை உலுக்கி எடுக்கும் மழை காரணமாகவும் மக்கள் சென்னையை நோக்கி வேக, வேகமாக விரைந்து வருகின்றனர். குறிப்பாக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு மட்டும் நேற்று ஒரே நாளில் 45,000க்கும் அதிகமான வாகனங்களில் லட்சக்கணக்கான மக்கள் சென்னை திரும்பியுள்ளனர்.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு மிக குறுகலான வழிகளில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதனிடையே, சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அறந்தாங்கியில் இருந்து சென்னை வந்த அரசு பேருந்து திண்டிவனம் அருகேயுள்ள கோர்ட் வளாகத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது ஒட்டுநர் ராஜபாண்டியனின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதையும் படிங்க: #BREAKING விடாமல் தொடரும் கனமழை... மேலும் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!
இந்த விபத்தில் விக்னேஷ் என்பவரது கை மற்றும் மணிக்கட்டு பகுதி கடுமையாக சேதமடைந்ததையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆபத்து...! 7வது முறையாக மேட்டூர் அணையில் ஏற்பட்ட மாற்றம்... 13 மாவட்ட மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை...!