விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி ஹேமாவதி கடந்த 12-ம் தேதி அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளது.சிறுமி காணாமல் போனதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பிறகு விழுப்புரம் மாவட்ட போலீசார் தீவிர தேடுதல் பணியைத் தொடங்கினர். தற்போது 100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் சுற்றுவட்டாரங்களிலும் தேடுதல் நடைபெற்று வருகிறது.சிறுமி காணாமல் போய் ஐந்தாவது நாளாகத் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ளது.

இதுவரை பல்வேறு இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டுள்ள போதிலும் சிறுமியின் இருப்பிடம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இதற்கிடையே போலீசார் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: வாழ்வதா.. நாண்டுகிட்டு சாவதா.?..! நல்லாட்சியா.. நாடக ஆட்சியா.? கொந்தளித்த வேல்முருகன்.!!
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் வடமேற்கு மாவட்டச் செயலாளர் குண சரவணன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிறுமி ஹேமாவதி குறித்து உறுதியான தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியை விரிவுபடுத்தி வருகின்றனர். சுற்றுவட்டார கிராமங்கள், காடுகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது
இதையும் படிங்க: மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையமா? அமைச்சருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!