VF3 முதல் VF9 வரை ஏழு மாடல் கார்கள் உள்ளது, முதலாவதாக VF6, VF7 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது விரைவில் VF3 கார் உற்பத்தி துவங்கும் என பேட்டி, தற்போது வேலை செய்யக்கூடிய பணியாளர்களில் 70 சதவீதம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என விண் ஃபாஸ்ட் திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் 48 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள வின் ஃபாஸ்ட் கார் நிறுவனத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து கார் விற்பனையையும் தொடங்கிவைத்தார். இது சம்பந்தமாக வின் ஃபாஸ்ட் கார் உற்பத்தி ஆலையின் திட்ட இயக்குனரிடம் கேட்டபோது Vf3 முதல் vf 9 வரை கார்கள் உள்ளது. மின்சாரக் கார் மக்களிடையே தேவைகள் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து மேலும் முதலீடு செய்யப்படும் 7 மாடல்களில் இரண்டு மாடல்கள் மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
VF6, VF 7 இது ஒரு இந்தியாவுடைய கம்பெனி டாடா டெக்னாலஜி யூனிடெட் கிங்டம் உடன் கலவையாக உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா மக்களும் ஓட்டத்தக்க தகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது அதே கார் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. இந்த VF 6 மற்றும் VF 7 சன் ரூப் குளோபல் அண்ட் கேப் மூலம் 5 ஸ்டார் வாங்கிய கார் இவை இந்தியாவில் பாரத் நியூ கார் அஸஸ்மென்ட் ப்ரோக்ராம் அதற்கு கூடிய சீக்கிரத்தில் அனுப்பப்பட்டு ஐந்து ஸ்டார் எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் படிங்க: ஒரு எம்.பிக்கே பாதுகாப்பு இல்லை.. மற்ற பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்.. எம்.பி சுதா வேதனை..!!
காருக்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கேட்டபோது விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை புக்கிங் அதிகமாக வந்திருக்கிறது காரின் விலையை எப்பொழுது முடிவு செய்ய வேண்டும் என முடிவு செய்து கூறப்படும் என கூறினார்.
20 முதல் 35 லட்ச ரூபாய் வரை இருக்கும் ஆனால் நாளடைவில் ஏழு பேர் அமர்ந்து செல்லக்கூடிய வாகனம் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் என கூறிய அவர் தோராயமாக விலையை கூற முடியாது விலை நிர்ணயித்த பிறகுதான் கூற முடியும்.
இந்தியாவில் உள்ள சாலைகளில் ஓட்டுவதற்கு தகுதியானதாக இருக்குமா என கேட்டதற்கு தரையில் இருந்து காரின் அமைப்பு உயரமாக இருக்கும் அதனால் இந்தியாவில் உள்ள சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றார் போல் இருக்கும்.
கார்கள் அதிகம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது ஆனால் அதன் விபரத்தை நாம் இப்போது சொல்ல முடியாது 45 நாட்களுக்கு பிறகு தான் வெளியிடப்படும் என திட்ட இயக்குனர் கூறினார்.
சுற்றுச்சூழல் சான்றிதழ் படி 10 கோடி ரூபாய் விண்பாஸ்ட் ஒதுக்கி இருக்கிறது தூத்துக்குடியில் இருக்கக்கூடிய பாலிடெக்னிக் காலேஜ் படிக்கக்கூடிய மாணவர்களை பயிற்சி கொடுத்து எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது அதற்கு முதல்கட்டமாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஆட்சியர் அலுவலகம் மூலம் பயிற்சி கொடுத்து 229 பேர் எடுக்கப்பட்டுள்ளது இதுபோல் கல்லூரியில் பயிற்சி கொடுக்கப்பட்டு எடுக்கப்படுகிறது.
வியட்நாம் இடது பக்கமும் இந்தியா வலது பக்கமாக வாகன ஓட்டிகளின் திசை இருப்பதால் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது இப்போது இங்கிருந்து ஸ்ரீலங்கா, நேபால் போன்ற நாடுகளுக்கு உடனடியாக கொடுக்க முடியும் நேபால், மொரிசியஸ், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்து பொருட்களை பார்க்க வந்திருந்தார்கள்.
தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் இதுவரை இன்னும் வெளியே செல்லவில்லை மற்ற கம்பெனிகளை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்பதற்காக மக்களிடம் எதைக் கொண்டு சேர்ப்பதற்காக இடது கை வாகன ஓட்டுவதற்கு கார்களை இறக்கி நுகர்வோர் வந்து காரை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறினார்.
மின்சார கார்களுக்கு தேவையான பேட்டரிகள் தற்போது வெளியே இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது விரைவில் எங்கே தயாரிக்க கூடிய நிலை வரும் அதற்கான இட வசதிகள் இருக்கிறது என கூறியவர் இந்தியா மார்க்கெட்டில் விரைவில் வெளியிடப்படும் உதாரணமாக எந்த மாவட்டத்தில் அதிகமான முன்பதிவு இருக்கிறதோ அங்கே தான் முதல் காரை அனுப்புவோம் என விண்பாஸ்ட் கார் தொழிற்சாலையின் திட்ட இயக்குனர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதையும் படிங்க: போலீசார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்த முயற்சி... ராமேஸ்வரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!