தமிழ் சினிமா உலகின் ஒரு முக்கியமான முகமாக, பல்வேறு பாதைகளைத் தாண்டி வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் பி.டி. செல்வகுமார். 1970 ஜனவரி 1 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த இவர், தனது தொழில் வாழ்க்கையை பத்திரிகைத்துறையில் தொடங்கி, பிஆர்.ஓ., தயாரிப்பாளர், இயக்குனர் எனப் பல பாதைகளைப் பயணித்து, சமூக ஆர்வலராகவும், அரசியல் விளையாட்டாளராகவும் உருவெடுத்துள்ளார். விஜயின் 27 ஆண்டுகால நெருக்கமான தோழன், அவரது படங்களின் பி.ஆர்.ஓ. ஆகவும் மேலாளராகவும் இருந்த செல்வகுமார், 'புலி' படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், அந்தப் படத்தின் தோல்வி அவரது வாழ்க்கையில் ஒரு தீவிரமான திருப்பத்தை ஏற்படுத்தியது.
கஜினி, போக்கிரி, வில்லு போன்ற விஜயின் பல வெற்றி படங்களின் பின்னணியில் இருந்து செயல்பட்டார். அவரது கடுமையான மேலாண்மை, தொழில்நுட்ப அறிவு, மற்றும் தொடர்பு வலையமைப்பு, சினிமா உலகில் அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தது. விஜயின் படங்கள் வெளியாகும் போது, அவரது பி.ஆர். உத்திகள் திரைப்படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. இந்தக் காலகட்டத்தில், செல்வகுமார் வெறும் மேலாளராக மட்டுமல்ல, விஜயின் நெருக்கமான நண்பராகவும் இருந்தார்.

இன்று, செல்வாக்குமார் முதல்வர் மு.க. ஸ்டாலினின் முன்னிலையில் திமுகவில் இணைந்து, அரசியல் அரங்கில் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று கூறி வருகிறார்.
இதையும் படிங்க: 2026ல் விஜயை முதல்வர் ஆக்கணும்..! தவெக ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்...!
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தான் போட்டி என்று தொடர்ந்து கூறி வருகிறார். மக்கள் சந்திப்பு என்றாலும் பொதுக்கூட்டங்கள் என்றாலும் மாநாடு என்றாலும் திமுகவை சரமாரியாக பேசுவதை விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் திமுகவில் இணைந்து இருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: விஜயின் கனவு மண்கோட்டை தான்... PAPER BOAT- ல கரையை கடக்க முடியுமா? வைகோ விமர்சனம்...!