தமிழக அமைச்சரவையில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி சட்டத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டிருக்கின்றார். அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த இயற்கை வளத்துறை கனிம வளங்கள் துறை சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி வசம் மாற்றப்பட்டிருக்கின்றது. அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தன. தொடர்ந்து சட்டஒழுங்கு சார்ந்த கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஜாதிய ரீதியிலான கொலைகள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகி இருக்கின்றது என்றெல்லாம் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த நிலையில் தான் அமைச்சர் ரகுபதியினுடைய பொறுப்பில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

இனிமேல் அமைச்சர் ரகுபதி சட்டத்துறை அமைச்சர் கிடையாது என்பதை தற்பொழுது முதலமைச்சருடைய பரிந்துரைப்படி ஆளுநர் ஆர்.என் ரவி மூலமாக ஆளுநர் மாளிகை வாயிலாக இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழ்நாடு அரசினுடைய சட்டத்துறை அமைச்சராக கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி தன்னுடைய சட்டத்துறை அமைச்சர் பொறுப்பை இழந்திருக்கின்றார். அதற்கு பதிலாக சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு துரைமுருகனுக்கு கூடுதல் துறைகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி வசம் இனிமேல் சுரங்கம் கனிமவளத்துறை உள்ளிட்ட துறைகள் மட்டும்தான் இருக்கும்.
இதையும் படிங்க: எங்களை குறைகூற அருகதை இல்லை... எடப்பாடியை விளாசி தள்ளிய ஆர்.எஸ்.பாரதி!!
துரைமுருகன் இருந்து மாற்றப்பட்டிருக்கக்கூடிய அந்த கனிமவளத்துறை மட்டும்தான் ரகுபதி வசம் இருக்கும் என்ற தகவலையும் சொல்லியிருக்கின்றார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சார்ந்த பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் முன்னிறுத்தி தங்களுடைய குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வந்த நிலையில் தான் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. தமிழ்நாடு அரசு இன்னும் ஓராண்டு காலம் தான் இருக்கின்றது தற்போதைய அரசு அதன் பிறகு தேர்தல் நடைபெற்றுதான் புதிய அரசு வர வேண்டும்.

இந்த சூழ்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே இருப்பதால் இனி அமைச்சரவை மாற்றம் இருக்காது என்று சொல்லப்பட்டது. ஆனால் ஒரு மிகப்பெரிய அமைச்சரவை மாற்றம் அதாவது சட்டத்துறை என்பது மிக மிக முக்கியமான ஒரு துறை. அந்த துறையை அமைச்சர் ரகுபதியிடமிருந்து பறத்திருக்கின்றார்கள். அமைச்சர் ரகுபதியிடமிருந்து சட்டத்துறை மாற்றப்பட்டு, துரைமுருகன் வசம் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. நீர்வளத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய துரைமுருகன் கூடுதல் பொறுப்புகளாக கனிம வளத்துறை, இயற்கை வழங்கல் துறை உள்ளிட்டவற்றை எல்லாம் கவனித்து வந்தார்.
அந்த துறையை மட்டும் எடுத்து ரகுபதிக்கு வழங்கிவிட்டு அமைச்சர் ரகுபதி வசம் இருந்த முக்கியமான துறையான சட்டத்துறையை தற்போது துரைமுருகனிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். இந்த மாற்றத்திற்கான பின்னணி காரணமாக மிக முக்கியமாக சட்டம் ஒழுங்கு சார்ந்த ஒரு சில விஷயங்கள் தான் இருக்கும் என்ற ஒரு கருத்து சொல்லப்படுகின்றது. ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பிலே அமைச்சர் ரகுபதியை நோக்கி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குள்ளாகி இருப்பதாக எதிர்கட்சிகள் சொல்கின்றன. ஜாதிய கொலைகள் அதிகரித்திருக்கின்றன. இந்த பழிவாங்கக்கூடிய சம்பவத்திலே கொலை சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என்றெல்லாம் கேள்வி கேட்க பொழுது சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி அவர்கள் பழிவாங்குதற்காக நடத்தக்கூடிய கொலைகளை நாங்கள் தடுக்க முடியாது என்பது போன்ற கருத்துக்களை எல்லாம் பேசியிருந்தார். அவர் சொன்னதன் அர்த்தம் ஒன்றாக இருந்தாலும், எப்படி கொலைகளை தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தது. எதிர்கட்சிகளை கோபம் கொள்ளச் செய்தது. குறிப்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஒவ்வொரு அறிக்கையிலும் சட்டமொழுங்கு சார்ந்த சில கேள்விகளை முன்வைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றார். இன்று வெளியிடப்பட்டிருந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கையிலும் கூட அமைச்சர் ரகுபதியை நோக்கியும் சட்டம் ஒழுங்கை நோக்கியும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் தான் முதலமைச்சர் பரிந்துரைப்படி இந்த முக்கியமான மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.
இதையும் படிங்க: #நாசமாய்போன_நான்காண்டு... ஸ்டாலின் ‘ஷாக்’, எடப்பாடி ‘ராக்’- தெறிக்கவிட்ட அதிமுக!