• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எ.வ.வேலுவிற்கு இடியை இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... கோடிகளில் நடந்த ஊழல்... வெளியானது பகீர் பின்னணி

    சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் பணம், ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Author By Amaravathi Thu, 25 Jun 2026 12:22:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why Raid at EV Velu residency

    சாலை அமைக்காமல் அமைத்ததாகக் கணக்குக் காட்டி ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணிகளை மேற்கொள்ளாமலேயே பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    இந்த வழக்குத் தொடர்பாக தற்போது 14 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் உள்ள முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: "கோடிக்கணக்கில் ஊழல்".? எ.வ. வேலு உட்பட 11 பேர் மீது பாய்ந்த வழக்கு..! தலையில் இறங்கும் பேரடி..!!

    அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் நான்கு பக்கங்களைக் கொண்ட புகார் மனுவை அளித்ததாகவும், அதன் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    DMK

    அந்த புகாரில், கரூர் மற்றும் பிற பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் கூட்டுச் சேர்ந்து, எந்தப் பணிகளையும் மேற்கொள்ளாமல் அரசுப் பணத்தை முறைகேடாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    மேலும், திருப்பூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்திற்குட்பட்ட கரூர் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக "சங்கரானந்தா இன்ப்ரா" நிறுவனத்திற்கு சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் எந்தச் சாலையும் அமைக்கப்படாத நிலையில் 2022 மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் ரூ.3.23 கோடி முறைகேடாக விடுவிக்கப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த முறைகேடு தொடர்பாக நடைபெற்ற ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், கரூரைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் சத்தியபாமா, உதவிக் கோட்டப் பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட நான்கு அதிகாரிகளும், ஈரோடு, நாமக்கல் மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர்கள் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளும் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

    முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த பிறகு, குற்றத்திற்கான ஆதாரங்களை மறைப்பதற்காக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டுச் சேர்ந்து அவசர அவசரமாக சாலை அமைத்ததாகவும் அந்தப் புகாரில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    DMK

    அறப்போர் இயக்கத்தின் புகாரைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 23, 2026 அன்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தற்போது சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எ.வ.வேலு உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் பணம், ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: எ.வ. வேலு வீட்டில் ரெய்டு..! ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். ! ஸ்டாலின் திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!

    அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!

    தமிழ்நாடு
    அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

    அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

    தமிழ்நாடு
    மருத்துவராக மாஸ் அவதாரம் எடுத்த ரஜினிகாந்த்..!! ‘தர்மன்’ பர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ வெளியீடு..!

    மருத்துவராக மாஸ் அவதாரம் எடுத்த ரஜினிகாந்த்..!! ‘தர்மன்’ பர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ வெளியீடு..!

    சினிமா
    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    தமிழ்நாடு
    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    தமிழ்நாடு
    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!

    அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!

    தமிழ்நாடு
    அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

    அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

    தமிழ்நாடு
    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    தமிழ்நாடு
    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    தமிழ்நாடு
    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    தமிழ்நாடு
    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share