உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், மேற்காசியப் பகுதியில் நிலவும் போர் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் 10 நாட்களிலேயே தொடர்ந்து 3வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த 15ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது.
இரண்டாவது முறையாக கடந்த மே 19ம் தேதி அன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அப்போது பெட்ரோல் விலை 79 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 104 ரூபாய் 46 காசுகளாகவும், டீசல் 86 காசுகள் அதிகரித்து 96.11 காசுககளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: #Breaking விடிந்ததும் இடியாய் இறங்கிய செய்தி... பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு...!!

இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 87 காசுகள் உயர்ந்து 105.31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து 96.98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இதனால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது பெரிய அளிவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிச்சயம் பாதிக்கும். ஏற்கெனவே பணவீக்கம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மக்கள் பாக்கெட்டுக்கு மீண்டும் அடிதான்! எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்..!