கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா என்றழைக்கப்படும் ஒரு சுய-பிரகடன தீர்க்கதரிசி, உலகம் அழியப்போவதாகக் கூறி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் Ebo Jesus என்ற பெயரிலும் அறியப்படுகிறார். 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி, டிக்டாக், யூடியூப் போன்ற தளங்களில் வெளியிட்ட வீடியோக்களில், கடவுள் தனக்கு தரிசனம் கொடுத்ததாகவும், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் தொடங்கி தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் மழை பெய்து உலகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கப் போவதாகவும் அறிவித்தார்.
பைபிளில் வரும் நோவாவின் கதையைப் போலவே, கடவுள் தன்னை அழிவிலிருந்து மீட்கும் பொறுப்பை கொடுத்ததாகக் கூறி, பெரிய மரப் படகுகளை கட்டி வருவதாக வீடியோக்களில் காட்டினார். குறைந்தது 8 முதல் 10 படகுகள் வரை கட்டியதாகவும், இவை மனிதர்கள், விலங்குகள் ஆகியவற்றை காப்பாற்றும் என்றும் தெரிவித்தார். குமாசி அல்லது டகோராடி போன்ற இடங்களில் இந்தப் பணிகள் நடப்பதாகக் கூறப்பட்டது.
சில வீடியோக்களில் விலங்குகள் தானாக வந்து சேர்வதாகவும், கடவுளுடன் உடன்படிக்கை செய்தவர்கள் மட்டுமே படகில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். இவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கில் பார்க்கப்பட்டு உலகளவில் வைரலானது. சிலர் இவரை உண்மையான தீர்க்கதரிசி என்று நம்பி ஆதரவு தெரிவித்தனர், பலர் இதை பைபிளுக்கு முரணானது என்று விமர்சித்தனர். ஏனெனில் பைபிளின் ஆதியாகமம் 9:11 இல் கடவுள் மீண்டும் வெள்ளத்தால் உலகை அழிக்க மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். அறிவியல் ரீதியாகவும் இத்தகைய உலகளாவிய வெள்ளம் சாத்தியமில்லை என்று வல்லுநர்கள் கூறினர்.
இதையும் படிங்க: "We're the biggest fugitives"..!! இந்தியாவை கிண்டல் செய்த லலித்மோடி..!! வைரலாகும் வீடியோ..!!
இந்த நிலையில் சுய பிரகடன தீர்க்கதரசி அந்தர் பல்டி அடித்துள்ளார். எபோ நோவா திடீரென தனது பேச்சை மாற்றிக்கொண்டு, உலகம் அழிவது தள்ளிப்போகப்போவதாகப் புதிய அறிவிப்பை வெளியிட்டார். தாம் கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால், அதனை ஏற்றுக்கொண்ட கடவுள் உலக அழிவை மழை மற்றும் வெள்ளத்தை தற்காலிகமாகத் தள்ளிவைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர், ஜெ.-வுடன் ஒரு செல்பி..!! AI-ஐ யூஸ் பண்ணி விளையாடும் செல்லூர் ராஜு..!! வைரல் வீடியோ..!!