ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் யோமிகா சிங் ஆகியோருக்கு எதிராக மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா அவதூறாகப் பேசிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரை கடுமையாக சாடி, உங்கள் வார்த்தைகளால் தேசமே தலைகுணிகிறது என்று தெரிவித்து, சிறப்புவிசாரணைக் குழு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை குறித்து ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் யோமிகா சிங் இருவரும் ஊடகங்களுக்குவிளக்கினர். இவர்கள் குறித்து மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா அவதூறாகப் பேசினார். அதிலும் சோபியா குரேஷி சார்ந்திருக்கும் மதத்தை குறிப்பிட்டு பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 21 நீதிபதிகளின் சொத்துக்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.. ரூ.120 கோடி வைத்துள்ள நீதிபதி யார்?
இதை தாமாக முன்வந்து வழக்காக எடுத்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், அமைச்சர் விஜய் ஷா மீது முதல்தகவல் அறிக்கையும், இரு சமூகத்துக்கு இடையே எதிரித்தனத்தையும், வெறுப்பையும் பரப்ப முயன்றார் என்று வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது,

தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் வந்ததைத்தொடர்ந்து அமைச்சர் விஜய் சங்க பகிரங்க மன்னிப்புக் கேட்டார். அது மட்டுமல்லாமல், யாருடைய மனதையும் காயப்படுத்தியிருந்தால் 10 முறை மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்தார். உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து விஜய் ஷா மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் 152பிரிவு, 196(1)(பி), 197(1)(சி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மத்தியப் பிரேதச உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், தான் மன்னிப்புக் கோர தயாராக இருப்பதாகவும் கூறி அமைச்சர் விஜய் ஷா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் அமர்வு “அமைச்சர் விஜய் ஷா மன்னிப்பை நாங்கள் ஏற்கவில்லை. நீங்கள் பேசிய வார்த்தைகளால் இந்த நாடே வெட்கித் தலைகுணிகிறது. சட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சி முதலைக் கண்ணீர் வடிக்கிறார், உங்களின் முதலைக்கண்ணீரால் ஒன்றும் செய்ய முடியாது. பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் ஒரு கருத்தைக் கூறும் முன்பு யோசித்திருக் வேண்டும், உணர்வுடன் செயல்பட வேண்டும்.

மத்தியப் பிரதேச போலீஸ் டிஜிபி செவ்வாய்கிழமை காலை 10மணிக்குள் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து அமைச்சர் விஜய் ஷா மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இந்த விசாரணைக் குழுவிற்கு ஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைவராகவும், 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளும் அதில் ஒருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை குறித்து அறிக்கையை வரும் 28ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். நாங்கள் விசாரணையை கண்காணிக்க முடியாது” என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: டெல்லி செங்கோட்டையே எங்களுக்குத்தான் சொந்தம்..! முகலாய பேரரசின் கொள்ளுபேரன் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனு..!