• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 இதர விளையாட்டுகள்

    வில்வித்தையில் 4வது தங்கம்... 48 ஆண்டு கால வரலாற்றையே அடித்து தும்சம் செய்த இந்திய மகளிர் அணி... பரபரப்பு பின்னணி...!!

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
    Author By Amaravathi Fri, 02 Oct 2026 08:20:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    asian game india won one more gold

    2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மற்றுமொரு வரலாற்றுச் சாதனை கிடைத்துள்ளது. வில்வித்தையின் மகளிர் ரீகர்வ் அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.

    நகோயாவில் உள்ள ஒகசாகி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியாவின் கும்கும், அங்கிதா மற்றும் கீர்த்தி ஆகியோர் அடங்கிய அணி, வில்வித்தையில் பலம் வாய்ந்த தென் கொரிய அணியை எதிர்கொண்டது. இதில் யுன்ஜி லீ, சேயங் காங் மற்றும் யேஜின் ஓ ஆகியோர் தென் கொரிய அணிக்காக களமிறங்கினர்.

    போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. முதல் செட்டில் இந்தியா மற்றும் தென் கொரியா தலா 54 புள்ளிகளைப் பெற்றதால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.

    இதையும் படிங்க: 45 ரன்னில் சுருண்ட இலங்கை! இந்தியாவின் அசத்தல் வெற்றி! பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதல்!

    இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் தென் கொரிய அணி 56 புள்ளிகளைப் பெற்றது. இந்திய அணியின் கும்கும் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை 10 புள்ளிகளை எய்தி, இந்திய அணியை 56-56 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனால் செட் கணக்கு 2-2 ஆனது.

    மூன்றாவது செட்டில் இந்திய வீராங்கனைகள் தங்களது அம்புகளை மிகவும் துல்லியமாக இலக்கை நோக்கி செலுத்தினர். இதன் மூலம் 55-51 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டை இந்திய அணி கைப்பற்றியது. இதனால் இந்தியா 4-2 என்ற முன்னிலை பெற்றது.

    தங்கப் பதக்கத்தை தீர்மானிக்கும் வகையில் அமைந்த நான்காவது செட்டிலும் பரபரப்பு நீடித்தது. தென் கொரியா 54 புள்ளிகளைப் பெற்ற நிலையில், இந்திய அணிக்காக கீர்த்தி மற்றும் அங்கிதா தலா 9 புள்ளிகளைப் பெற்றனர்.

    கடைசி அம்பை எய்யும் பொறுப்பு கும்குமிடம் வந்தபோது இந்திய அணிக்கு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டது. ஆனால் அந்தச் சூழலையும் சிறப்பாகக் கையாண்ட கும்கும், தனது கடைசி அம்பை 10 புள்ளிகள் கிடைக்கும் வகையில் துல்லியமாக இலக்கில் செலுத்தினார். இதனால் அந்த செட்டும் 54-54 என சமநிலையில் முடிந்தது.

    இதன் மூலம் செட் கணக்கில் 5-3 என்ற முன்னிலையுடன் தென் கொரியாவை இந்திய மகளிர் அணி வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

    இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தென் கொரியாவின் நீண்டகால ஆதிக்கத்துக்கும் இந்திய வீராங்கனைகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

    1978ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ரீகர்வ் அணிகள் பிரிவு இடம்பெற்று வருகிறது. அந்தப் பிரிவு அறிமுகமானது முதல் இதுவரை நடைபெற்ற அனைத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தென் கொரிய அணியே தங்கப் பதக்கத்தை வென்று வந்தது.

    மேலும், அந்த அணியால் இதுவரை எந்த இறுதிப்போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் இருந்த நிலையில், இந்திய மகளிர் அணி அந்த சாதனைப் பயணத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

    ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல்முறையாக மகளிர் ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, முதல் வாய்ப்பிலேயே தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

    கும்கும், அங்கிதா மற்றும் கீர்த்தி ஆகியோரின் இந்த வரலாற்று வெற்றிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இதையும் படிங்க: போர்ச்சுகல் அணியில் இருந்து ரொனால்டோ விலகல்.. ரசிகர்கள் ஷாக்..!! பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுங்கள்! வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

    துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுங்கள்! வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை! கேரளம் அரசு உத்தரவு!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை! கேரளம் அரசு உத்தரவு!

    இந்தியா
    வெற்றி பயணம் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

    வெற்றி பயணம் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் ரோடு ஷோ பாதையில் போராட்டம்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட நிர்வாகிகள் கைது!

    முதல்வர் விஜய் ரோடு ஷோ பாதையில் போராட்டம்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட நிர்வாகிகள் கைது!

    தமிழ்நாடு
    பெண்களைப் பற்றி பேசினால் சும்மா இருக்க மாட்டேன்! ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் ஆவேச பதிலடி!

    பெண்களைப் பற்றி பேசினால் சும்மா இருக்க மாட்டேன்! ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் ஆவேச பதிலடி!

    தமிழ்நாடு
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share