நடப்பு ஐபிஎல் (IPL 2026) கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோதும் ஆட்டங்களின் மைதானங்கள் மாற்றப்படுவதாக பிசிசிஐ (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் மற்றொரு ஆட்டத்தை நேரடி காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
முதலில் வெளியிடப்பட்ட அட்டவணையின்படி, ஏப்ரல் 26-ஆம் தேதி சென்னை - குஜராத் இடையிலான லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது இந்தப் போட்டி அகமதாபாத்தில் இருந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல், இதே இரு அணிகள் மோதும் மற்றொரு லீக் போட்டி முன்னதாக சென்னையில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் போட்டியானது வரும் மே 21-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!
உள்ளூர் திருவிழாக்கள் அல்லது பாதுகாப்பு காரணங்களால் இந்த இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், சொந்த மைதானத்தில் ஒரு கூடுதல் போட்டியில் சிஎஸ்கே விளையாடுவது சென்னை ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகளாக விளங்குவதால், இந்தப் போட்டிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. சேப்பாக்கத்தின் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் சிஎஸ்கே அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!