• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 தொழில்நுட்பம்》 மொபைல் போன்

    ரூ.4.5 லட்சமாம்..!! இந்தியாவில் 5 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த ஐபோன் டியோ!! பரபரப்பான விவாதம்!

    இதே நாளில் டெல்லியின் செலக்ட் சிட்டிவாக் மாலில் உள்ள ஆப்பிள் ஸ்டோரிலும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    Author By Shanthi M. Fri, 23 Oct 2026 16:39:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    apple-iphone-duo-sells-out-in-5-minutes-on-blinkit-questions-raised

    ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான ஐபோன் டியோ, இந்தியாவில் அதிகாரப்பூர்வ விற்பனை தொடங்கிய அன்றே விரைவான வர்த்தக தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்ஸ்டன்ட் டெலிவரி சேவையான பிளிங்இட் தளத்தில் டெல்லி-என்சிஆர் பகுதியில் மட்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.15 மணிக்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட இந்த போன், ஐந்தே நிமிடங்களில் முழுமையாக விற்றுத் தீர்ந்தது.

    இதனை பிளிங்இட் நிறுவனர் அல்பிந்தர் திண்ட்சா தனது எக்ஸ் கணக்கில் உறுதிப்படுத்தியுள்ளார். கூடுதல் ஸ்டாக்கை வரும் வாரங்களில் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் விற்பனைக்கு வைக்கப்பட்ட மொத்த யூனிட்களின் எண்ணிக்கை குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

    இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் “உண்மையில் எத்தனை போன்கள் இருந்தன? இரண்டா அல்லது ஐந்தா?” என கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் ஆப்பிள் தனது டியோ மாடலுக்கு போதிய வரவேற்பு இல்லை என ஒப்புக்கொண்ட நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான யூனிட்களை மட்டும் விற்று “காலியாகிவிட்டது” என அறிவிப்பது நகைச்சுவையாகத் தெரிகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: ரூ.20 லட்சம் விலையில் களமிறங்கும் ஐபோன் டுயோ..!! லிக்விட் மெட்டல் அறிமுகம்!!

    இன்னும் சிலர் “இந்தியாவில் இதைவிட அதிக விலை நிர்ணயித்தாலும் சில நிமிடங்களில் விற்றுத் தீரும். 10 லட்சம் ரூபாய் விலையிலும் விற்றுத் தீர்ந்திருக்கும்” என கிண்டல் செய்துள்ளனர். ஒருவர் “இதன் மூலம் நாம் பணக்கார நாடு என்பது தெரிகிறது” என கருத்து தெரிவித்துள்ளார்.

    இதே நாளில் டெல்லியின் செலக்ட் சிட்டிவாக் மாலில் உள்ள ஆப்பிள் ஸ்டோரிலும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முன்பதிவுகளிலேயே முதல் வார ஸ்டாக் தீர்ந்துவிட்டதாகவும், டெலிவரி தேதிகள் ஜனவரி 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில சில்லறை விற்பனையாளர்கள் அதிகாரப்பூர்வ விலையை விட ரூ.70,000 முதல் ரூ.1 லட்சம் வரை கூடுதலாக வசூலித்து விற்பனை செய்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    Blinkit

    ஐபோன் டியோவில் 7.6 இன்ச் மடிக்கக்கூடிய உள் திரையும், மடிக்கும்போது பயன்படுத்தக்கூடிய 5.4 இன்ச் வெளிப்புற திரையும் இடம்பெற்றுள்ளன. A20 Pro சிப், 48 மெகாபிக்சல் கேமரா அமைப்பு, டைட்டானியம் ஃப்ரேம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். நான்கு ஸ்டோரேஜ் விருப்பங்கள் உள்ளன. இந்தியாவில் 256GB மாடல் ரூ.2,99,900, 512GB ரூ.3,24,900, 1TB ரூ.3,74,900, 2TB ரூ.4,49,900 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் இதுவரை வெளியிட்ட மிக விலையுயர்ந்த ஐபோன் ஆகும்.

    உலகளவில் அதிக தேவை காரணமாக ஆப்பிள் உற்பத்தி இலக்கை 9.7 மில்லியனிலிருந்து 14 மில்லியனாக உயர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய போன்களின் வளர்ச்சியை இந்த விற்பனை உறுதிப்படுத்துகிறது.

    பிளிங்இட் போன்ற விரைவு வர்த்தக தளங்கள் உயர்மட்ட மின்னணுப் பொருட்களையும் எளிதாக வீட்டு வாசலுக்கே கொண்டு வரும் புதிய போக்கை இது வெளிப்படுத்துகிறது. கூடுதல் ஸ்டாக் வந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: 343 கி.மீ. ரேன்ஜ், அசத்தலான அம்சங்கள்! புதிய எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்த அல்ட்ராவயலெட்!!

    மேலும் படிங்க
    வங்கக்கடலில் தீவிர புயலாக மாறிய

    வங்கக்கடலில் தீவிர புயலாக மாறிய 'அர்னாப்': மணிக்கு 140 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று  எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    என் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்: கைதுக்குப் பின் அன்பில் மகேஷ் ஆவேச பேட்டி!

    என் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்: கைதுக்குப் பின் அன்பில் மகேஷ் ஆவேச பேட்டி!

    தமிழ்நாடு
    தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தருவதாக பண மோசடி: அன்பில் மகேஷ் கைது குறித்து போலீஸ் அறிக்கை!

    தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தருவதாக பண மோசடி: அன்பில் மகேஷ் கைது குறித்து போலீஸ் அறிக்கை!

    தமிழ்நாடு
    கனிமப் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல மேலும் 3 மாதங்கள் தடை நீட்டிப்பு!

    கனிமப் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல மேலும் 3 மாதங்கள் தடை நீட்டிப்பு!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு!

    உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    1949 அரசு நில ஒதுக்கீட்டு திட்டத்தை மறுஆய்வு செய்க: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    1949 அரசு நில ஒதுக்கீட்டு திட்டத்தை மறுஆய்வு செய்க: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share