இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், டேட்டா கார்டில் பணம் இல்லாமல் ஸ்மார்ட்போனில் ஆன்-லைனில் வீடியோ, டி.வி பார்க்கும் வசதி விரைவில் அறிமுகமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக டைரெக்ட் டூ மொபைல் (டி2எம்) தொழில்நுட்பம் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவத்தை இந்தியாவிலும், உலகளவிலும் பெற்றுள்ளது. இந்த டி2எம் தொடர்பாக தினசரி ஏராளமான அப்பேடட்கள், தகவல்கள் வெளியாகி, மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவில் மக்களுக்காக விரைவில் டூ2எம் தொழில்நுட்பம் விரைவில்அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கெனவே இந்தத் திட்டத்தின் சோதனை ஓட்டங்கள் முடிந்தநிலையில், தொழில்நுட்பரீதியாக தயாராக இருக்கிறது, ஆனால், இதைப் பயன்படுத்துவதற்கான கருவிகள் தயாரிப்பு பணியில் உள்ளன.
இதையும் படிங்க: புது மொபைல் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இந்த 2 மொபைல் விலை கம்மி!
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். அவர்கல் பச்சைக்கொடி காண்பித்தால், இந்தத் திட்டம் இந்தியாவில் அறிமுகமாகும், லட்சக்கணக்காணோர் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்

டி2எம் தொழில்நுட்பம் என்றால் என்ன?
டைரெக்ட் டூ மொபைல் டெக்னாலஜிதான் டி2எம் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் மூலம் டிவி, வீடியோ, ஆடியோ, டெக்ஸ்ட் மெசேஜ்கள் ஆகியவை நேரடியாக மொபைல்போனுக்கு காற்றின் அலைகள் மூலம் வரும். இதற்கு இன்டர்நெட் அல்லது வை-பை இணைப்பில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒருவர் இன்டர்நெட் டேட்டா கார்டு ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

டி2எம் தொழில்நுட்பத்தின் நன்மை என்ன?
1. டி2எம் தொழில்நுட்பம் பயன்படுத்தும்போது மொபைல் போனின் டேட்டா லோடு குறையும், டேட்டா பயன்படுத்துவது குறையும்.
2. தொழில்நுட்ப வசதிகளான நெட்ஓர்க் அல்லது பிராண்ட்பேண்ட் வசதி செய்து தரமுடியாத பகுதிகளுக்கு டி2எம் தொழில்நுட்பம் வரப்பிரசாதமாகும். இந்த பகுதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும், வனப்பகுதிகள், மலைப்பகுதிகளில் கூட டி2எம் தொழில்நுட்பம் வேலை செய்யும்.
3. பெங்களூரைச் சேர்ந்த சாங்க்யா லேப்ஸ், இந்த டி2எம் தொழில்நுட்பத்துக்காக பிரத்தியேக சிப் தயாரித்துள்ளனர். இதற்கு எஸ்எல்3000 எனப்ப பெயரிட்டுள்ளனர்.
4. இந்த சிப் மூலம் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் டேட்டா இல்லாமல், காற்றின் அலைகள் மூலம் அனைத்து செய்திகள், வீடியோக்கள், ஆடியோக்களை பெறலாம்.

5. ஐஐடி கான்பூரைச் சேர்ந்த ப்ரீ ஸ்ட்ரீம் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
6. இதன் நோக்கம் மொபைல் டேட்டா மலிவாக இருக்க வேண்டும், நெட்வொர்க் இடைஞ்சல்கலைகுறைக்க வேண்டும், மலைப்பாங்கான, வனப்பகுதிகளில் செய்திகளை கொண்டு செல்ல வேண்டும்.
7. அமெரிக்காவின் சின்க்ளேயர் ஒளிபரப்பு நிறுவனமும் இந்த தொழில்நுட்பத்துக்காக குறிப்பிடத்தகுந்த முதலீடு செய்துள்ளது, மொபைல் போனில் மிகக்குறைந்த விலையில் டி2எம் தொழில்நுட்பத்தை எவ்வாறு கொண்டு வருவது குறித்து இலக்காக வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் எந்த நிறுவனம் அதிகளவில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது தெரியுமா?