ஐகிளவுட் ஸ்டோரேஜ் பற்றாக்குறையால் வாட்ஸ்அப் சாட் பேக்கப் செய்யும் போது தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்ளும் ஐபோன் பயனர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. மெட்டா நிறுவனத்தின் பிரபல செய்தி அப்ளிகேஷன் வாட்ஸ்அப், தனது பயனர்களுக்கென பிரத்யேக கிளவுட் பேக்கப் சேவையை உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் தற்போது iOS பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வருவதாக WABetaInfo தெரிவித்துள்ளது.
இதுவரை ஐபோன் பயனர்கள் தங்களது சாட்கள், மீடியா கோப்புகள் மற்றும் பிற தரவுகளை பேக்கப் செய்ய ஐகிளவுட்டை நம்பியிருந்த நிலையில், ஸ்டோரேஜ் வரம்பு காரணமாக பலரும் சிரமப்பட்டு வந்தனர். புதிய அம்சம் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப்பின் சொந்த சர்வர்களில் சாட்களை பாதுகாப்பாக சேமிக்க முடியும். இது ஐகிளவுட் இடத்தை மிச்சப்படுத்துவதோடு, முழு என்க்ரிப்ஷன் (end-to-end encryption) வசதியையும் தானாகவே வழங்கும்.

பயனர்களுக்கு இரு ஆப்ஷன்கள் வழங்கப்படும். ஐகிளவுட் டீஃபால்ட் ஆக இருக்கும். தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் வாட்ஸ்அப் சர்வருக்கு மாற்றிக்கொள்ளலாம். ஐகிளவுட் பேக்கப்பில் பயனரே என்க்ரிப்ஷனை இயக்க வேண்டியிருந்த நிலையில், வாட்ஸ்அப் சர்வரில் பேக்கப் செய்யும்போது இது தானாகவே செயல்படுத்தப்படும்.
இதையும் படிங்க: உலக ஸ்மார்ட்போன் சந்தையில் அதிர்ச்சி: RAM பற்றாக்குறை.. 4% விற்பனை வீழ்ச்சி!
பாஸ்கீ, பாஸ்வேர்டு அல்லது 64 இலக்க என்க்ரிப்ஷன் கீ மூலம் கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடியும்.ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இதேபோன்ற வசதி விரைவில் வரவிருக்கிறது. கூகுள் டிரைவுக்கு பதிலாக வாட்ஸ்அப் சொந்த சேவையைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
ஸ்டோரேஜ் திட்டங்கள்: முதல் கட்டமாக 2 ஜிபி வரை இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படும். அதற்கு மேல் 50 ஜிபி ஸ்டோரேஜ் தேவைப்பட்டால் மாதம் 0.99 அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ.95) செலுத்த வேண்டும்.இந்த அம்சம் தற்போது டெவலப்மெண்ட் ஸ்டேஜில் உள்ளதால், அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் வாட்ஸ்அப் பயனர்களின் தரவு பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, கிளவுட் ஸ்டோரேஜ் செலவையும் கணிசமாகக் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லான்ச் ஆன எட்டே நாளில்.. ஸ்மார்ட்போன் விலை ரூ.8,000 உயர்வு..!! ஷாக் கொடுத்த சாம்சங்..!!